For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்? தொடரும் மர்மம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Iran hits on the US embassy in iraq

    பாக்தாத்: ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் தூதரகத்தை ஏவுகணை மூலம் தொடர்ந்து தாக்கி வருவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்து வருகிறது.

    ஈரான் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படியே அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சண்டை தற்போது பெரிதாக தொடங்கி உள்ளது.

    நேற்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்று அதி நவீன ஏவுகணைகள் ஈராக்கை நோக்கி சென்று அங்கிருந்த அமெரிக்க தூதரகம் அருகே தாக்கியது. இந்த தாக்குதலில் யாரும் பலியாகவில்லை.

     சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம் சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்

    ஆனால் பொறுப்பு

    ஆனால் பொறுப்பு

    ஆனால் அமெரிக்கா தூதரகம் அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை. ஈரான் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஈரான் அரசு சார்பாக யாரும், நாங்கள்தான் தாக்கினோம் என்று கூறவில்லை.

    என்ன மறுப்பு

    என்ன மறுப்பு

    அதே சமயம் ஈரானை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிலர் இந்த தாக்குதலை மறுத்துள்ளனர். எங்களுக்கு தெரிந்து ஈராக்கில் அப்படி எதுவும் தாக்குதல் நடக்கவில்லை. ஈராக் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. சுலைமானி கொலைக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். ஆனால் கண்டிப்பாக அது சிறிய தாக்குதலாக இருக்காது. கண்டிப்பாக பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

    மர்மம்

    மர்மம்

    இதுவரை மூன்று முறை அமெரிக்காவின் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை யாரும் பலியாகவில்லை. ஆனால் இந்த மூன்று தாக்குதலையும் நடத்தியது யார் என்று இன்னும் விபரம் வெளியாகவில்லை. யாரும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. யாரோ இப்படி அமெரிக்காவின் தூதரகத்தை தாக்கிவிட்டு, அதற்கு பொறுப்பேற்காமல் இருப்பது பெரிய சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதற்கு பின் வேறு சதி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    ஈராக் எப்படி

    ஈராக் எப்படி

    ஈராக் அமெரிக்கா உடன் கூட்டணியில் இருந்தாலும், கூட, இன்னும் ஈரான் உடன் அந்த நாடு நட்பில்தான் இருக்கிறது. இதனால் ஈரானுக்கு உதவி செய்யும் வகையில் ஈராக் இராணுவமே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஈராக்கில் அமெரிக்காவிற்கு எதிராக நிறைய கிளர்ச்சி இயக்கங்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்கா மட்டுமே ஏனோ இந்த தாக்குதலை கண்டிப்பாக ஈரான்தான் நடத்தி இருக்கும் என்று சந்தேகம் கொள்கிறது.

    English summary
    Iran doesn't want to claim the missile attack on the US embassy in Iraq: Who did this anyways?.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X