அடடே இது மாஸ்டர் ப்ளான்.. இஸ்ரேல் - ஈரான் போரால் மாறும் தலையெழுத்து! இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இஸ்ரேல் ஈரான் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போரில் அதிகாரப்பூர்வமாக இணைவதாக ஏமன் அறிவித்திருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மூடப் போவதாக ஈரான் கூறியுள்ளது. இதனால் சர்வதேச எண்ணெய் வர்த்தகம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலையில் ரஷ்யா அமெரிக்காவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை முன்னதாகவே அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவும் இணைந்துள்ளது. ஈரானில் மூன்று அணு உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச அளவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு ரஷ்யா பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. மேலும் சில நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iran US India

அந்த வகையில் ஏமன் அதிகாரப்பூர்வமாக போரில் இணைவதாக அறிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு கடற் பகுதியில் இருக்கும் அமெரிக்காவின் போர் கப்பல்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படியாக பரபரப்பான சூழல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க அடுத்த அதிரடியை ஈரான் அரங்கேற்றியுள்ளது. அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் தங்கள் நாட்டு கடல் பகுதியில் நுழைவதை தடுக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜல சந்தியை மூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் சுமார் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் இந்த ஜலசந்தி வழியாகத் தான் நடைபெறுகிறது. குறிப்பாக இந்தியாவுக்கு தேவையான 40 சதவீத கச்சா எண்ணெய் 50 சதவீத எரிவாயு இறக்குமதியும் இந்த ஜலசந்தி வழியாகத் தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஜலசந்தி மூடப்பட்டால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் விலைவாசி ஏற்றம், பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதையெல்லாம் சமாளிக்கும் வகையில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரு நாளைக்கு 20 லட்சம் முதல் 28 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து இருக்கிறது. இது சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் ஆகிய நாடுகளிடமிருந்து வாங்கப்படும் மொத்த கொள்முதலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிடம் இருந்து மே மாதத்தில் சுமார் 2.5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த நிலையில், ஜூன் மாதத்தில் அது நான்கரை இலட்சமாக உயர்ந்து இருக்கிறது. ஈரான் அமெரிக்கா போர் காரணமாக இதுவரை கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், அதில் பிரச்சனை எழ வாய்ப்பு இருக்கிறது என்பதை முன்பே கணித்த இந்தியா ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 96 சதவீதம் ஹோர்முஸ் நீர் இணைப்பு மூலம் நடைபெறும் நிலையில் அந்நாடு கடும் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓமன் மற்றும் ஈரான் இடையே அமைந்திருக்கும் ஹார்முஸ் ஜலசந்தி ஓமன் வளைகுடாவை அரேபிய கடலுடன் இணைக்கிறது. சுமார் 33 கிலோ மீட்டர் அகலம் கொண்ட இந்த ஹார்முஸ் ஜலசந்தி 3 கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்ட கப்பல் பாதையை கொண்டிருக்கிறது. உலகின் ஒட்டு மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு நான்கு, அதாவது 80 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த மாதம் வரை தினமும் சுமார் 20 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+