இஸ்ரேலை சும்மா விட மாட்டோம்! "ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்!" பெரிய தாக்குதலுக்கு ஈரான் போடும் திட்டம்! ஷாக்
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் நாட்டிற்கும் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அஞ்சப்படும் நிலையில், இதற்காக ஈரான் ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3 என்ற பெயரில் போட்டுள்ள பகீர் திட்டம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றம் உச்சத்தில் இருக்கிறது. அங்கு இஸ்ரேல்- ஹமாஸ் இடையே தொடங்கிய போர் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி மோதலாக மாறும் சூழலில் இருக்கிறது.

அதிகரிக்கும் பதற்றம்: ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்ற நிலையில், இதனால் ஆத்திரமடைந்த ஈரான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய பாதிப்பு இல்லை என்ற போதிலும், இது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரித்தது.
இந்தச் சூழலில் கடந்த அக். 26ம் தேதி ஈரானுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் ராணுவ தளங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதில் 4 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தே இருக்கிறது.
ஈரான் புதிய எச்சரிக்கை: இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இதற்கிடையே சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் கொண்ட இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளதாகப் பிரபல சர்வதேச ஊடகமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த அக். 26ம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு மிகக் கடுமையான பதிலடி தரப்படும் என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று தான் கூறியிருந்தார். கமேனி இப்படி தலடாடி கருத்துகளைக் கூறிய மறுநாளே இந்த தகவல் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிக மோசமான தாக்குதல்: ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் உடன் மட்டும் தனது தாக்குதலை ஈரான் நிறுத்திக் கொள்ளாதாம்.. நிச்சயம் பெரியளவில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தாக வால் ஸ்டிரீட் ஜார்னல் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் ஈரான் அதிகாரிகளின் இந்த கருத்துகள் வெறும் அச்சுறுத்தல் மட்டுமா இல்லை நிஜமாகவே பெரிய தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனரா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
முன்னதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படையும் நிச்சயம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருந்தது. இது குறித்துக் கூடுதல் தகவல்களைப் பகிர முடியாது என்ற போதிலும் தாக்குதல் மிகப் பெரியளவில் இருக்கும் என்று ஈரான் தரப்பு கூறியது.
ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3: ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 3 என்ற பெயரில் இந்தத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாகவும் கடந்த ஏப்ரல்- அக்டோபர் மாதங்களில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களைப் போலவே இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டால் அது பிராந்திய போராக வெடிக்கும் என்பதால் உலக நாடுகள் மத்திய கிழக்கில் நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications