அமெரிக்காவுக்கு செக்.. ரஷ்யா செல்லும் ஈரான் அமைச்சர்.. புதினுடன் எடுக்க போகும் முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நேற்று அதிகாலையில் திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ரஷிய அதிபர் புதினுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இஸ்ரேல் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Iran Isreal

ஈரானில் ரஷ்யா அமைத்துள்ள அணுசக்தி தளம் செயல்பட்டு வருகிறது. ஈரானின் அணுசக்தி, ஏவுகணைத் திட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கருதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் சார்பில் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமர் புதினை, இன்று (ஜூன் 23) சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக இஸ்தான்புல்லில் நேற்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரேல், அமெரிக்கா எங்களது நாட்டின் அணுசக்தி நிலையங்களைத் தாக்கி எல்லையை மீறிவிட்டனர். இது ஆபத்தான தாக்குதலாகும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான ஈரான் தங்களைப் பாதுகாக்கும்.

நான் ரஷ்யா தலைநகரான மாஸ்கோவிற்கு செல்கிறேன். ரஷ்ய அதிபர் புதினை ஜூன் 23 ஆம் தேதி (இன்று) சந்தித்து இந்த தாக்குதல் தொடர்பாக தீவிரமான ஆலோசனை நடத்தவுள்ளோம். ஈரான் மற்றும் ரஷ்யா எப்போதும் எங்கள் நிலை குறித்து கலந்தாலோசனை செய்து ஒருங்கிணைந்து பயணிப்போம்." என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ரஷ்யா ஏற்கனவே கண்டித்திருந்தது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இஸ்ரேலின் அத்துமீறலை கடுமையாக கண்டித்ததுடன், ஈரானுக்கு ரஷ்யா உறுதுணையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

ரஷ்யா முன்னாள் அதிபர் திமித்ரி மெத்வதேவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "இந்த தாக்குதல் ராணுவம் மற்றும் அரசியல் ரீதியாக தோல்வியடைந்துவிட்டது. மாறாக முன் எப்போதும் இல்லாதளவுக்கு அணுசக்தி விளைவுகளை தூண்டிவிடும். ஏராளமான உலக நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதங்கள் வழங்க தயாராக உள்ளன." என்று கூறியுள்ளார்.

அவர் அந்த நாடுகளின் பெயரைக் குறிப்பிடாவிடினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார். மெத்வதேவ் தன்னுடைய பதிவில், "டிரம்ப் தன்னை அமைதிக்கான அதிபராக காட்டிக் கொண்டே, மறுபக்கம் போரை தூண்டியுள்ளார்." என்று விமர்சித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அமைச்சர் மற்றும் ரஷ்ய அதிபர் சந்திப்பு உலகளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+