ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி மரணம்.. ஈரான் நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.

Iranian President Ebrahim Raisi helicopter accident rescue operation going on in full swing

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர்.

அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார்.

அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?: ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையே, தெளிவற்ற வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது அல்லது அவசரமாக தரையிறங்கியது. ஆரம்பத்தில், உள்துறை மந்திரி அஹ்மத் வஹிடி, மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கடுமையாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். ஆனால் இப்போது ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கல்: ஹெலிகாப்டர் விழுந்த இடம் மலை, காடுகள் நிறைந்த நிலப்பரப்பு மற்றும் கடும் மூடுபனி கொண்ட இடம் ஆகும். இந்த மோசமான வானிலை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்ததாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே மரண செய்தியை அறிவிக்க 12 மணி நேரம் எடுத்தது.

கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கிருந்து உடலை எடுத்து வரும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. உடலை மீட்கும் மீட்பு பணியினர் அங்கே செல்ல முடியாத சூழல் உள்ளது. அப்படியே சென்றாலும் பெரிய அளவில் உடல் பாகங்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

ஹெலிகாப்டர் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படும் துருக்கியின் ஆளில்லா விமானம் ஒன்றுதான் கண்டுபிடித்தது.

யார் இவர்; கடந்த 1960 டிசம்பர் 14ஆம் தேதி அங்குள்ள மஷாத்தின் நோகன் மாவட்டத்தில் ஒரு மதகுரு குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த இப்ராஹிம் ரைசி. பள்ளிப் படிப்பை முடித்த இவர், தொடர்ந்து சட்டப் படிப்பை முடித்தார். ஈரானின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவராக ரைசி வளம் வந்தார். தொடர்ந்து நீதிபதியாக பணியாற்றிய அவர் கடந்த 2019இல் ஈரான் நாட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அந்த நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. கடந்த சில வாரங்களாக ஈரான் - இஸ்ரேல் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதிலும் இஸ்ரேல் மீது ஈரான் பல சர்ப்ரைஸ் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான் இந்த விபத்தும் நடந்து உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+