For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கில் தாக்குதல் நடத்துகிறது அமெரிக்கா! பெர்சிய வளைகுடாவுக்கு விரைந்தது போர்க்கப்பல்!!

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக்கில் முன்னேறி வரும் சதாம் உசேன் ஆதரவு படையினர் மீது தாக்குதல் நடத்துவதற்காக விமானந் தாங்கி போர்க் கப்பலை பெர்சிய வளைகுடாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவு படையினர் (ஐ.எஸ்.ஐ.எஸ்) மொசூல், திக்ரித் உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றியுள்ளனர். தலைநகர் பாக்தாத்தையும் நெருங்கிவிட்டனர்.

Iraq conflict: US sends warship to the Gulf

இவர்களை எதிர்கொள்ள அமெரிக்காவின் உதவியை ஈராக் அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஈராக் அரசுக்கு ஆதரவாக பொதுமக்களும் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று ஷியா பிரிவு மதகுரு அயாதுல்லா அலி அல் சிஸ்தாரி அழைப்பு விடுத்தார். இதை ஏற்று ஷியா பிரிவினர் ஏராளமானோர் ஆயுதமேந்தி ராணுவத்துடன் இணைந்துள்ளனர்.

தற்போது அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ஜார்ஜ் எச். டபிள்யூ புஷ் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் பெர்சிய வளைகுடா பகுதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இது வடக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இந்த கப்பலில் 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இருக்கின்றன.

English summary
The US says it is sending a major warship into the Gulf to provide it with military options should the situation in Iraq deteriorate further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X