அமெரிக்கா + இஸ்ரேல் + இந்தியா.. ஒன்றான 3 நாடுகள்! பாகிஸ்தானின் அணு மையங்கள் மீது தாக்குதல்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் இணைந்து பாகிஸ்தானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது பாகிஸ்தானை அதிர வைத்துள்ளது. இந்நிலையில் தான் அதுபற்றி இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர்அப்துல் பாசித் முக்கிய விளக்கத்தை கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் மொத்தம் 9 நாடுகளிடம் மட்டுமே அணுஆயுதம் என்பது உள்ளது. அதன்படி அமெரிக்கா, ரஷ்யா, சீனா, வடகொரியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே உள்ளது. பிற நாடுகளிடம் அணுஆயுதம் என்பது இல்லை.

pakistan india us

இதில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுடனான மோதல் காரணமாக இப்போது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. ஈரானின் இந்த திட்டத்தை முடக்க அமெரிக்கா முயன்று வருகிறது.

அணுசக்தி திட்டம் என்ற பெயரில் ஈரான் அணுஆயுதம் தயாரிக்காமல் தடுக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு இன்னும் ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. ஈரான், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யாவிட்டால் அந்த நாடு மீது இதுவரை இல்லாத அளவுக்கு வெடிகுண்டுகள் வீசப்படும் என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் ஈரான் இன்னும் அமெரிக்காவுடன் டீல் செய்ய விரும்பவில்லை.

இப்படியான சூழலில் தான் தற்போது பாகிஸ்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அப்துல் பாசித் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை உள்ளது. இப்படியான சூழலில் இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வியூகம் வகுத்துள்ளதாக அப்துல் பாசித் தெரிவித்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அப்துல் பாசித், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக பதவியேற்றுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து இந்தியா பாகிஸ்தானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி அப்துல் பாசித்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அப்துல் பாசித், ‛'டொனால்ட் டிரம்ப் இப்போது பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பார் என்று பல வதந்திகள் உள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பாகிஸ்தானிடம் அணு குண்டுகள் இருப்பதை விரும்பவில்லை என்பது உண்மைதான். இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் மட்டுமே அணுஆயுதம் வைத்துள்ள நாடாக உள்ளது. இது பலருக்கும் கவலையை ஏற்படுத்துகிறது.

ஆனாலும் பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. அணுகுண்டுகளை அழிக்க வாய்ப்பில்லை. மீறி எங்களை சீண்டினால் உலகில் உள்ள எந்த நாடுகளுக்கும் உரிய பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஏவுகணைகள் உள்பட பிற அணுஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+