Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணுஆயுதத்தை கையிலெடுத்த இஸ்ரேல்? திடீர் சோதனையால் அதிர்ந்த பூமி? மத்திய கிழக்கில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்: ஈரான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு கொடுத்து வருகின்றன. மேலும் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை உள்ளது. இதனால் இஸ்ரேலும், ஈரானை தாக்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் திடீரென்று இஸ்ரேல் அணுஆயுத சோதனையை நிகழ்த்தியதாக தகவல்கள் பரவி வருகிறது.

அதாவது இஸ்ரேலின் தெற்கு பகுதியில் நெகேவ் என்ற பாலைவனம் உள்ளது. இங்கு இஸ்ரேல் பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் ராணுவ தளம் மற்றும் சில முக்கிய கட்டமைப்புகள் உள்ளன.

எல்லவாற்றுக்கும் மேலாக இஸ்ரேலின் டிமானோ என்ற பகுதியில் ஷிமோன் பெரஸ் எனும் அணுஉலை அணுஆயுத சோதனை மையம் உள்ளது. இது மிகவும் ரகசியமான இடமாக உள்ளது. இங்கு அணு உலை மற்றும் மறுசுழற்சி ஆலைகள் உள்ளன. உலக நாடுகளை பொறுத்தவரை இந்த இடம் இஸ்ரேல் அறிவிக்கப்படாத அணுஆயுத திட்டத்துக்கான சோதனைக்கூடமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த பாலைவனத்தை சுற்றிய குடியிருப்புகளில் பெடூயின் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று காலை 9 மணியளவில் அந்த பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை நெகேவ் பாலைவனத்தையொட்டி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் உணர்ந்தனர். சில வினாடிகள் வரை பூமி குலுங்கி உள்ளது. இஸ்ரேலில், நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்றைய தினம் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அது பெரும் விவாதத்தை கிளப்பியது. ஏனென்றால் நேற்று காலை 9 மணியளவில் நாடு முழுவதும் அவசர நிலைக்கான சைரன்கள் ஒலித்தது.பொதுவாக எதிரிகள் தாக்குதல் நடத்தும்போது இந்த அவசர நிலை எச்சரிக்கை விடுக்கப்படும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது கொண்டு வரப்படும். நேற்றைய தினம் சைரன் ஒலித்த சிறிது நேரத்திலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் என்பது அணுஆயுத சோதனை நடத்தும்போது ஏற்படும் அதிர்வை கொடுத்துள்ளது. இதனால் தான் இஸ்ரேல் அணுஆயுத சோதனையை நடத்தியதாக தகவல்கள் பரவ தொடங்கி உள்ளது. மேலும் நிலநடுக்கம் உணரப்பட்ட இடம் மிகவும் முக்கியமானது. இந்த நிலலநடுக்கத்தை நெகேவ் பாலைவனத்தையொட்டிய குடியிருப்பு பகுதி மக்கள் உணர்ந்தனர். நெகேவ் பாலைவனத்தில் இஸ்ரேலின் அணுஆயுத மையம் உள்ளது. இதனால் தான் இந்த நிலஅதிர்வு என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதோடு, ரகசியமாக தன்னிடம் இருக்கும் அணுஆயுதத்தை இஸ்ரேல் சோதனை செய்ததா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மேலும் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் நீண்டகாலமாக மோதல் உள்ளது. இருநாடுகளும் பகையாளிகளாக உள்ளன. காசாவில் இஸ்ரேல் போர் புரிந்தது இந்த பகையை இன்னும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேலும், ஈரானும் மாறி மாறி தாக்கி கொண்டன. அதுமட்டுமின்றி ஈரான் அணுஆயுதம் தயாரிக்க இஸ்ரேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையே தான் ஈரானில் மக்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‛‛ஈரான் மக்கள் விடுதலைக்காக போராடுகின்றனர். ஈரான் மக்களுடன் எங்களின் நாடும், நானும், அரசும் நிற்கிறோம்'' என்றார்.

அதேபோல் டொனால்ட் டிரம்பும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். ஈரானில் போராட்டம் நடத்தும் மக்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா தலையீடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் பல்லாயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் ஈரானை தாக்கலாம்.

இந்த சமயத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் மீதான தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் அணுஆயுத சோதனையை நடத்தியதாக தகவல்கள் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி ஈரான் மீது இஸ்ரேல் அணு ஆயுதத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா? என்ற அச்சம் உருவாகி உள்ளது.

இருப்பினும் இந்த செய்தியை இஸ்ரேல் மறுத்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இஸ்ரேல் அணுஆயுதம் வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் அணுஆயுத பரவல் தடை சட்டத்துக்குள் இன்னும் இணங்கவில்லை. அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மட்டுமே யூத நாடு. பிற நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய நாடுகள்.

சில நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகளுடன் இஸ்ரேலுக்கு மோதல் உள்ளது. இதனால் இஸ்ரேல் தனது அணுஆயுதத்தை வைத்து மிரட்டி வருகிறது. இப்படியான சூழலில் தற்போதைய சம்பவம் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேலின் நடவடிக்கையை மத்திய கிழக்கு நாடுகள் கண்காணிக்க தொடங்கி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+