சவூதியில் நடந்த இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்
தம்மாம்: கடந்த மாதம் 25ம் தேதி இந்தியன் சோஷியல் ஃபோரமின் தம்மாம் கிளை துவங்கப்பட்டது. இந்நிலையில் ஃபோரமின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் கடந்த 30ம் தேதி நடைபெற்றது.
கடந்த 25.05.14 அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.
கடையநல்லூர் சைபுல்லாஹ் இந்தியன் சோஷியல் ஃபோரம் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார். இந்திய அரசியல் அமைப்பு சட்டமும், ஜனநாயகமும் என்ற தலைப்பில் இந்தியன் சோஷியல் ஃபோரமின் கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.
காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம்!
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF) கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் உயர்மட்ட நிர்வாக குழு கூட்டம் 30.05.2014 அன்று வெள்ளிக்கிழமை மாலை தலைமை நிலையத்தில் தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி தலைமையில் நடைபெற்றது.
பொதுசெயலாளர் திப்பு சுல்தான் தீர்மானங்கள் குறித்து விளக்கமளித்தார்.
தலைமையின் வழிகாட்டலுக்கு இணங்க அல்கோபர், அல்-ஜுபைல், தம்மாம், அல்ஹஸ்ஸா போன்ற ஊர்களில் கிளை துவக்கி நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை இணைத்துள்ள அனைத்து பகுதி பொறுப்பாளர்களைும் பாராட்டப்பட்டனர்.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய சுதந்திர தின விழாவை அனைத்து கிளைகளிலும் எழுச்சியுடன் நடத்து, தற்போதைய இந்திய அரசியல் சூழல் குறித்தும், ஆட்சியாளர்களுடைய சிறுபான்மை மக்களின் மீதான அணுகுமுறை குறித்து சவூதி அரேபியாவில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அல்ஹஸ்ஸா நிர்வாகிகள் அதிரை ரியாஸ், சலீம், தம்மாம் நிர்வாகிகள் காயல் செய்யது முஹம்மது, நரிப்பையூர் குதுபுதீன், அல்-ஜுபைல் நிர்வாகி அதிரை ஹஸன் அஹமது, அல்கோபர் நிர்வாகிகள் ராஜகிரி ஹாஜா முகைதீன், நெல்லை ஏர்வாடி ஷேக் முகைதீன், சிஹாத் நிர்வாகி தக்கலை ஷமீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஃபோரமின் கிழக்கு மாகாண செயலாளர் நரிப்பையூர் சம்சுதீன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications