உலகை உலுக்கிய 127 பேர் படுகொலை- பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்.!!
பாரீஸ்: 127 பேரை பலி கொண்ட பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கம்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதிகள் கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் 127 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
உலகை உலுக்கிய இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான பிரான்ஸின் நடவடிக்கைக்கு பதிலடி இது என முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.
Paris Attacks claim of responsibility https://t.co/6UmO7jQuIV pic.twitter.com/B7UQsBUnVv
— Offstumped Report (@offstumped) November 14, 2015 இதனிடையே இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம் என பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் வெளியான சிறிது நேரத்திலேயே ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், பாரீஸ் தாக்குதலுக்கு அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், பாரீஸ் நகரத்தின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஆயுதங்களுடனும் தற்கொலை பெல்ட்டுகளுடனும் தானியங்கி துப்பாக்கிகளுடனும் நாங்களே அனுப்பி வைத்தோம் என தெரிவித்துள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications