For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2வது ஜப்பானிய பிணையாளி தலை துண்டித்துக் கொலை.. ஐஎஸ் தீவிரவாதிகள் வெறியாட்டம்

Google Oneindia Tamil News

அம்மான், ஜோர்டான்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஜப்பானைச் சேர்ந்த 2வது பிணைக் கைதியை தலை துண்டித்துக் கொலை செய்து விட்டனர். இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்ட ஜப்பானியர் பத்திரிகையாளர் கெஞ்சி கோட்டோ ஆவார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறிச் செயல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பல நாட்டவரைக் கடத்தி வைத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் வைத்து பெரும் பணம் சம்பாதித்து வருகின்றனர். பணம் கொடுக்க மறுக்கும் நாடுகள் மற்றும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தால் அந்த நாட்டவரை தலை துண்டித்துக் கொடூரமாக கொன்று வருகிறார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைகளை வீடியோவில் படமாக்கி வெளியிட்டும் வருகின்றனர்.

Islamic State Militants Say They Killed 2nd Japanese Hostage

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் தற்கொலைப்படை தீவிரவா சஜிதா அல் ரிஷாவியை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து வந்தனர். இதற்காக ஜோர்டான் விமானி ஒருவரையும், ஜப்பான் நாட்டு பத்திரிகையாளரான கென்ஜி கோடோ என்பவரையும் கொல்லப் போவதாகவும் அவர்கள் கடந்த 2 வாரமாக மிரட்டி வந்தனர்.

தங்களது நிபந்தனையை ஏற்காவிட்டால் இருவரையும் கொன்று விடுவோம் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது கோட்டோவை அவர்கள் கொலை செய்து விட்டனர். தலை துண்டிக்கப்பட்டு இறந்த கோட்டோவின் உடலை படம்பிடித்து வீடியோவாக தங்களது அல் பர்கான் என்ற டிவிட்டர் கணக்கில் நேற்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். 67 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், கோட்டோவின் உடலின் பின்னால் முகத்தை மறைத்து நிற்கும் தீவிரவாதி, ஜப்பானியர்களை குறிவைத்து மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என எச்சரித்துப் பேசியுள்ளான்.

தற்போது ஜோர்டான் நாட்டு விமானி குறித்த தகவல் தெரியவில்லை. தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ள 2வது ஜப்பானியர் கோட்டோ ஆவார். ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜப்பானைச் சேர்ந்த ஹருனா யுகவா என்ற இன்னொரு ஜப்பானியர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தீவிரவாதிகளின் செயல் குறித்து ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே கூறுகையில், தீவிரவாதிகளின் நெருக்கடிக்கு ஒருபோதும் ஜப்பான் அடிபணியாது என்று கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் கோட்டோ கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
In its latest video, the Islamic State group said that it had beheaded another Japanese hostage, Kenji Goto, after a deadline for a prisoner swap expired.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X