அணு ஆயுதத்தை உருவாக்க விட மாட்டோம்.. ஈரான் அணு விஞ்ஞானிகளை.. ராக்கெட் தாக்குதலில் கொன்ற இஸ்ரேல்!
டெஹ்ரான்: இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் அணு ஆயுத மாஸ்டர் மைண்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் அப்பாசி மற்றும் தெஹ்ரான்சி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்தை செய்துள்ளது. 2015ல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் 2018ல் டிரம்ப் ஆட்சியில் நீக்கப்பட்டது.

ஈரான் அணு ஆயுதம்
ஈரான் அமெரிக்கா சொல்வதை கேட்கவில்லை மற்ற ஆயுத சோதனைகளை செய்கிறது என்று கூறி ஒப்பந்தத்தை நீக்கியது. இதன் காரணமாக ஈரானுக்கு தற்போது அணு ஆயுதம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில் தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.
ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
எச்சரித்த ஈரான்
சமீபத்தில் ஈரான் மீது ஐநாவின் அணு ஆயுத வாட்ச் டாக்.. அதாவது கண்காணிப்பு அமைப்பு விமர்சனம் வைத்து இருந்தது. அணு சக்தியை பயன்படுத்துவதில் ஈரான் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கவில்லை.. அவர்கள் அணுவை பயன்படுத்தும் விதத்தில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க மறுக்கிறார்கள் என்று விமர்சனம் செய்து இருந்தது.
இதன் காரணமாக கடுப்பான ஈரான்.. தற்போது தங்களின் புதிய சென்ட்ரிபுகல் அமைப்புகளை ஆக்டிவேட் செய்ய போகிறதாம். அதனால் சென்ட்ரிபுகல் அமைப்பில்தான் அணுவை செறிவூட்ட முடியும். அதாவது ஒரு சிலிண்டர் அமைப்புகளை குறிப்பிட்ட வாயுக்களை அனுப்ப வேண்டும். இதன் மூலம் அணுவை செறிவூட்ட முடியும்.
இப்படிப்பட்ட அணுவை செறிவூட்டினால் மட்டுமே.. அதை ஆயுதமாக பயன்படுத்த முடியும். இதைத்தான் ஆக்டிவேட் செய்ய போவதாக ஈரான் அறிவித்தது.
அணு ஆயுதம் உருவாக்கும் நேரத்தில் அட்டாக்
இப்படி அணு ஆயுதத்தை ஈரான் உருவாக்க வேண்டிய சூழலில்தான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரான் நாட்டின் அணு ஆயுத மாஸ்டர் மைண்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானிகள் அப்பாசி மற்றும் தெஹ்ரான்சி கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவின் உதவி இல்லாமலே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
-
லீக்கான அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்.. அட இதெல்லாம் இருக்கா.. ஈரானுக்கு இனி ராஜவாழ்க்கை! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications