மக்கள் கொந்தளிப்பால் கனத்த மவுனம் கலைத்த ஈரான்.. இஸ்ரேலை கதறவிட்ட நூற்றுக்கணக்கான ஏவுகணைகள்!
டெஹ்ரான்: ஈரானுக்குள் நுழைந்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது முதல் லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை வரையிலான இஸ்ரேலின் தாக்குதல் வேட்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்த ஈரான் இப்போது உக்கிரமான பதிலடித் தாக்குதலை தொடங்கி இருக்கிறது. இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஈரான் நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அலற வைத்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு மீதான தாக்குதலில் அதன் தலைவர் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்டார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தினரை அழித்ததில் தொடங்கி ஹிஸ்புல்லா மீதான தொடர் தாக்குதல், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை என அத்தனை சம்பவங்களிலும் ஈரான் கனத்த மவுனம் காத்தது.

இத்தனைக்கும் ஹமாஸ், ஹிஸ்புல்லா இரண்டுமே ஈரான் உருவாக்கிய ஆயுதக் குழுக்கள். ஈரான் பெற்றெடுத்த ஆயுதக் குழுக்கள். பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனானிலும் ரத்த வெள்ளத்தை ஏற்படுத்திய போதும் ஈரான் பெரும் அமைதி காத்தது. ஈரான் அரசு தரப்பும் சரி, ஈரான் புரட்சிப் படையும் சரி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்காமல், இஸ்ரேல் எங்களை போருக்குள் இழுத்துவிடுகிறது என ஒதுங்கியே இருந்தது ஈரான்.
ஆனால் ஈரானியர்கள் அமைதி காக்கவில்லை. ஈரான் முழுவதும் அசாதாரணமான சூழ்நிலை உருவானது. ஈரானில் இஸ்ரேலின் கொட்டத்தை அடக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. இதனால் வேறுவழியே இல்லாமல் இப்போது ஈரான், இஸ்ரேலை வதம் செய்யத் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே சிரியா தலைநகரில் ஈரான் தூதரகம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி தந்தது ஈரான். தற்போது லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களுக்கு சரமாரியான பதிலடி கொடுத்து வருகிறது ஈரான்.
ஈரான் திடீரென நடத்திய இந்தத் தாக்குதல் உலக நாடுகளை அலற வைத்துள்ளது. அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனத்தில் இருந்து உலக நாடுகள், ஈரானின் ஆவேசத்தின் போக்கு எங்கே போய் முடியும் என்பதை உணர்ந்துதான் அலறிக் கொண்டிருக்கின்றன. அதுவும் லெபனானுக்குள் தரைவழியாக நுழைந்தும் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் கொக்கரித்த நிலையில்தான் ஈரான் சரமாரியான பதிலடியை தொடங்கி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications