இப்போதைக்கு முடியாது போல.. இஸ்ரேலில் பரவும் புதிய வகை கொரோனா.. விமான நிலையத்தில் 2 பேருக்கு உறுதி.!
ஜெருசலோம் : கொரோனா வைரசின் ஓமிக்ரான் திரிபின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வைரஸாக உருமாறியுள்ளாதாகவும், இஸ்ரேல் நாட்டில் விமான நிலையத்தில் இருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரேஸ் சுகாதாரதுறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், 2 மாதங்களுக்குள் உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது.
ஏற்கெனவே மக்களை பாதித்துவந்த டெல்டா வைரஸை ஓரங்கட்டி, தற்போது ஒமைக்ரான் வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இஸ்ரேலில் பாதிப்பு
இஸ்ரேல் நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து ஃப்ளோரோனா வைரஸ் என உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது. உலக நாடுகள் அனைத்தும் டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் ஃப்ளோரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

கட்டுப்பாடுகளில் தளர்வு
இந்நிலையில் இஸ்ரேலின் 9.2 மில்லியன் மக்கள்தொகையில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 8,244 இறப்புகள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் கொரோனா தொற்று வழக்குகள் இஸ்ரேல் நாட்டில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மாதம், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்தது.

புதிய வகை வைரஸ்
இஸ்ரேல் நாடு நோய் பாதிப்பு தரவுகளின் அடிப்படையில் தொடர்ந்து சரிவைக் காண்கிறது என்று அந்நாட்டின் பிரதமர் நஃப்தலி பென்னட் கூறிய நிலையில், டிசம்பர் 2020 ஆண்டிலேயே தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்கிய முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். இந்த மாத தொடக்கத்தில், ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிப்பு எழுச்சி ஏற்பட்ட நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு நான்காவது கோவிட் தடுப்பூசி தடுப்பூசிகளை வழங்குவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது.

இருவருக்கு பாதிப்பு
இந்த நிலையில்தான், புதிய கொரோனா மாறுபாட்டு வைரஸ் இரண்டு பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து தேவையில்லாமல் கவலைப்படவில்லை அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு துணை வகைகளான BA.1 மற்றும் BA.2 இணைந்து இந்த மாறுபாடு உருவாகியுள்ளதாகவும், இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளிடம் PCR சோதனையின் போது இது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கவலை தேவையில்லை
இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் அறியப்படவில்லை என்றும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சக அறிக்கை கூறியுள்ள நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மாறுபாட்டின் காரணமாக இருவர், காய்ச்சல், தலைவலி மற்றும் தசைநார் சிதைவு போன்ற லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், ஆனால் இதற்காக சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications