மாலத்தீவிலிருந்து வெளியேறிய இந்திய ராணுவ வீரர்கள்.. சீன ஆதரவால் தடுமாறும் அதிபர் முய்ஜு
மாலே: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து இந்திய வீரர்களும் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிபர் முகமது முய்ஜுவின் சீன ஆதரவு நிலைப்பாடுதான். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவுடனான உறவை கொஞ்சம் கொஞ்சமாக முறிக்க தொடங்கியுள்ளது.

அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 90 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருந்தது வந்தனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக கூறி வீரர்கள் அனைவரையும் வெளியேற்ற அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு உத்தரவிட்டார்.
இது இவரது தேர்தல் வாக்குறுதியில் ஒன்று. அதாவது, "இந்திய ஆதரவு என்பதை மாற்றி சீன ஆதரவு நிலைப்பாடு என்பதை நோக்கி மாலத்தீவு நகரும். நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய ராணுவ வீரர்கள் நமது மண்ணிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்" என்று பிரசாரத்தில் முய்ஜு கூறியிருந்தார். இது அந்நாட்டு மக்களை வெகுவாக ஈர்த்தது. எனவே அவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்துதான் ராணுவ வீரர்களை வெளியேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மே 10ம் தேதிக்குள் அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து இந்திய வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக மாலத்தீவு அதிபரின் அலுவலக தலைமை செய்தித் தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்திருக்கிறார்.
இவர்களுக்கு பதிலாக இந்தியா கொடுத்துள்ள விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பராமரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் மாலத்தீவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இது தவிர, இந்தியாவுடன் போடப்பட்ட 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே 'ஹைட்ரோகிராஃபிக் சர்வே' ஒப்பந்தமாகும்.
கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்று கூறிவிட்டது.
இதற்கெல்லாம் ஹைலைட்டாக சீன உளவு கப்பல்களுக்கு மாலத்தீவு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது. இலங்கை இந்தி விவகாரத்தில் இந்தியாவின் பேச்சை கேட்கவில்லை. அந்த வரிசையில் தற்போது மாலத்தீவும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications