For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏலே.. அங்க பார்ல நம்ம "பாண்டி"யை.... ஸ்தம்பித்த மெக்சிகோ சிட்டி...!

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் நடந்த ஜேம்ஸ் பாண்ட் பட படப்பிடிப்பு காரணமே நகரமே ஸ்தம்பித்துப் போயிருக்கிறதாம். மால்கள், சாலைகள் மூடப்பட்டதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டு விட்டதாக வர்த்தகர்கள் புலம்புகிறார்கள்.

மெக்சிகோ சிட்டியில் நடந்து வரும் இந்த ஷூட்டிங் காரணமாக நகரமே பரபரப்பாக காணப்படுகிறது. நகரின் முக்கியப் பகுதியான ஸோகோலோ என்ற இடத்தில் சண்டைக் காட்சியைப் படம் பிடித்தபோது கேமாவென்று கூட்டம் கூடி விட்டது.

James Bond ‘Spectre’ filming costing Mexico City businesses millions due to closed roads, malls: report

ஸ்பெக்ட்ரே.. இதுதான் டேணியில் கிரேக் நடித்து வரும் அடுத்த பாண்ட் படமாகும். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது மெக்சிகோ சிட்டியில் நடந்து வருகிறது. சண்டைக் காட்சிகளை ஹெலிகாப்டர்களை வைத்து பிரமாண்டமாக படமாக்கி வருகிறார்கள்.

மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மெக்சிகோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த படப்பிடிப்பு காரணமாக ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனால் மெக்சிகோ சிட்டியில் உள்ள வர்த்தகர்கள்தான் திண்டாடிப் போயுள்ளனராம். காரணம் படப்பிடிப்பு நடக்கும் பகுதிகளில் சாலைகளை மூடி விடுகின்றனர். வர்த்தக மையங்களை மூடி விடுகின்றனர். இதனால் வர்த்தகம முற்றிலும் பாதித்துப் போயுள்ளதாம். கிட்டத்தட்ட 24 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் புலம்புகின்றனர்.

James Bond ‘Spectre’ filming costing Mexico City businesses millions due to closed roads, malls: report

ஸ்பெக்ட்ரே 24வது பாண்ட் படமாகும். இப்படத்தின் தொடக்க காட்சிகள் மெக்சிகோ சிட்டியில் நடப்பது போல வருகிறதாம். இந்தக் காட்சிகளில் 1500 துணை நடிகர்கள் பங்கேற்று நடித்துள்ளனராம்.

படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் வர்த்தகர்களுக்கு ஒரு நாளைக்கு 130 டாலர் இழப்பீடாக தருகிறார்களாம் படக் குழுவினர். ஆனால் இது போதாது என்பது வர்த்தகர்களின் கருத்தாகும்.

அடுத்து இத்தாலியிலும், ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலைத் தொடரிலும் படப்பிடிப்பு தொடரவுள்ளதாம்.

இதற்கிடையே இன்னொரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

James Bond ‘Spectre’ filming costing Mexico City businesses millions due to closed roads, malls: report

அதாவது மெக்சிகோவுக்குப் புறப்பட்டு வந்த பாண்ட் பட ஸ்டண்ட்மேன்கள் சிலர் விமானத்தில் பெரும் ரகளை செய்து விட்டனராம். குடிபோதையில் வாந்தி எடுத்தும், ஜன்னல்களில் சிறுநீர் கழித்தும், சிகரெட் புகைத்தும் அட்டகாசம் செய்துள்ளனராம்.

பாண்ட் எவ்ளோ டீசன்ட்டா இருக்கார்.. இது நேருக்கு மாறா இருக்கே....!

English summary
Officials in Mexico City are claiming that the crew shooting the new James Bond movie is costing the city some $24 million by shutting down streets and shopping malls, bleeding local business owners dry. The 24th installment of the spy thriller, titled "Spectre," is filming a blockbuster opening sequence in Mexico's capital involving 1,500 extras in spooky Day of the Dead costumes and a pulse-pounding helicopter duel, The Guardian reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X