டோக்கியோவை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை.. உயிரிழப்பும் இல்லை
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.4 அலகாக பதிவாகியுள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேசமயம், டோக்கியோவிலும், பிற பகுதிகளிலும் நிலநடுக்கத்தை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 முறை சராசரியாக 5.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஒரு மாதத்தில் 55 முறையும் கடந்த வருடத்தில் மட்டும் 742 முறையும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னு பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 47 கிலோமீட்டர் ஆழத்தில், ஜப்பான் நேரப்படி காலை 11.47 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை இல்லை என்று அமெரிக்க புவியியல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு நிலத்தட்டுக்களின் மேல்தான் ஜப்பான் தீவு அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நிலநடுக்கம்தான். சிறியதும், பெரியதுமாக பல நிலநடுக்கங்களைப் பார்ப்பது ஜப்பான் மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறி விட்டது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications