For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாக் ஷோவில் ஹிட்லர் படம் போட்ட டி சர்ட்டை அணிந்து வந்த பங்கேற்பாளருக்காக மன்னிப்பு கேட்ட டிவி சேனல்!

ஹிட்லர் படம் போட்ட சட்டை அணிந்து வந்து நேரலை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு சர்ச்சை எழுந்ததால் ஜப்பானின் தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானின் தொலைக்காட்சி நிறுவனமான என்ஹெச்கே தங்களது நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் ஹிட்லரின் படம் போட்ட டீ சர்ட் அணிந்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

புதன்கிழமையன்று என்ஹெச் கேவில் பிற்பகல் நேரலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினரும் தொழில்முனைவருமான டக்கஃபூமி ஹோரி பங்கேற்றார்.

நேரலையில் பங்கேற்ற போது ஹோரி கருப்பு நிற டீ சர்ட்டில் போர் வேண்டாம் என்று ஒரு பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Japan TV says sorry over guests Hitler cartoon T-Shirt

நல்ல விஷயம் தானே இதற்கு ஏன் சர்ச்சை என்கிறீர்களா, டீ சர்ட்டின் மற்றொரு பக்கத்தில் ஹிட்லரின் படம் போட்டு அவரது நெஞ்சில் சமாதான சின்னம் இருப்பதும் போன்று அச்சிடப்பட்டிருந்தது தான் வில்லங்கத்திற்குக் காரணம். சிறப்பு விருந்தினரின் அந்த டீ சர்ட்டிற்கு பார்வையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேரலையில் மன்னிப்பு

இந்த நிகழ்ச்சியின் போதே, தொலைக்காட்சி தொகுப்பாளர் சிறப்பு விருந்தினர் அணிந்து வந்த டி சர்ட்டை சுட்டிக்காட்டி மன்னிப்பு கேட்டார். ஹிட்லர் கார்ட்டூன் படம் போட்டவரை நேரலை விவாதத்திற்கு அனுமதித்தது ஏன் என்று பார்வையாளர்கள் வறுத்தெடுத்துவிட அதற்கு பதிலளித்த தொலைக்காட்சி நிர்வாகம், விருந்தினர் இது போருக்கு எதிரான செய்தி என்று குறிப்பிட்டதாலேயே அனுமதித்தாக டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளனர்.

சர்ச்சையில் சிக்கிய அதிகாரி

நாசி மற்றும் ஹிட்லரை போற்றுவோர் மீது சர்ச்சை எழுவது ஜப்பானில் இது முதன் முறையல்ல. கடந்த மாதம் மேற்கத்திய நாடுகளின் மந்தமான கொள்கைகள்தான் ஹிட்லரை ஆட்சியில் அமர வைத்தது என்று ஜப்பான் மத்திய வங்கி உறுப்பினரான யுடாகோ ஹராடா கூறி இருந்தார். ஹிட்லரின் பொருளாதாரக் கொள்கையை ஜப்பானிய அதிகாரி ஒருவர் பாராட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

8 கோடி பேர் பலி

1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய இரண்டாம் உலகப் போர், 1945ம் ஆண்டு மே மாதம் ஐரோப்பாவிலும், செப்டம்பர் மாதம் ஜப்பானிலும் முடிவுக்கு வந்தது. 8 கோடிக்கும் அதிகமான உயிர்களைப் இந்தப் போர் பலி கொண்டது.

காரணம் என்ன?

ஹிட்லரின் நாசிச கொள்கை போட்ட வன்முறை வெறியாட்டத்தை ஜப்பானியர்கள் வெறுக்கின்றனர். இதன் காரணமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹிட்லர் படம் போட்ட டி சர்ட் அணிந்து வந்தவரால் சர்ச்சை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Japan's public broadcaster NHK apologized Wednesday over a cartoon with Adolf Hitler's face that was printed on a T-shirt worn by a talk show guest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X