அதிகாலை அரண்மனையிலிருந்து வெளியேறிய மகோ.. காதலரை கரம்பிடித்தார்.. இளவரசி அந்தஸ்தை இழந்தார்

ஜப்பான் இளவரசியின் திருமணம் இன்று நடந்தது

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: எளிமையான முறையில் ஜப்பான் இளவரசி மகோவின் திருமணம் இன்று நடந்தது.. அரச குடும்ப அந்தஸ்தை இன்று முதல் இழக்கிறார் மகோ.

ஜப்பான் அரண்மனை வழக்கப்படி, அரச குடும்பம் இல்லாமல் வெளி ஆட்களை கல்யாணம் செய்தால், அவர்களுக்கு அரசுரிமை கிடையாது.. சொத்துரிமை உட்பட மானியம் எதுவுமே கிடையாது..

அந்த திருமணத்தின்போது அரண்மனையில் மேற்கொள்ளப்படும் எந்தவித பாரம்பரிய சடங்குகளும் செய்யக்கூடாது.. உரிமைகளும், அடையாளங்களும் பறிபோகும். இதுதான் நடைமுறை விதி.

காதல்

காதல்

இவ்வளவையும் தன்னுடைய தூய்மையான காதலுக்காக தூக்கி எறிந்தார் ஜப்பான் இளவரசி.. அந்த நாட்டின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்திதான் மகோ.. செல்வ செழிப்புடன் வலம் வரும் இளவரசி.. 2012-ல் தன்னுடன் காலேஜில் படித்த சக நண்பர் கெய் கோமுரோ என்பவருடன் காதல் மலர்ந்தது.. மிக மிக சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் கோமுரோ.

 எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

கடந்த 2017-ல் இருவருமே ஒன்றுசேர்ந்து தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.. இளவரசியின் இந்த அறிவிப்பு பலத்த எதிர்ப்புகளையும், சர்ச்சைகளையும் பெற்று தந்தது.. அரசு குடும்பத்தில் பூகம்பமே வெடித்தது.. திருமணமும் தள்ளி போன நிலையில், கடந்த மாதம் அதிரடியான ஒரு முடிவை இளவரசி மகோ அறிவித்தார்.. அதன்படி, காதலனின் கரம் பிடிக்க, தன்னுடைய அரச பட்டத்தை துறக்க தயார் என்றார்.. அரசு நிதியுதவியும் தனக்கு தேவையில்லை என்றார்..

ஆச்சரியம்

ஆச்சரியம்

மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தையும் வேண்டாம் என்றார். இப்படி ஒரு துணிச்சலான முடிவை உலக மக்களே ஆச்சரியத்துடன் பார்த்தனர்.. 3 நாளைக்கு முன்பு மகோவுக்கு 30வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.. அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவர் கொண்டாடும் கடைசி பிறந்தநாள் அதுவாகத்தான் இருந்தது..

எளிமை

எளிமை

இன்றுதான் மகோவுக்கு கல்யாணம்.. அதிகாலை, அரண்மனையிலிருந்து மகோ வெளியேறினார்... அப்போது, தன்னுடைய பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ, தங்கை ககோ ஆகியோரை கட்டிப்பிடித்து உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார்... அப்போது அவர் ப்ளூ கலரில் மிக மிக எளிமையாக ஆடை அணிந்திருந்தார்... பாரம்பரிய விழாக்கள் இல்லாமல் சாதாரண நபரை போல், தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்..

விதிமுறைகள்

விதிமுறைகள்

இதற்கான ஆவணத்தை ஜப்பான் அரச குடும்ப அரண்மனை வெளியிட்டுள்ளது... ஜப்பானிய அரச குடும்ப விதிமுறைகளின்படி, இன்று முதலே, இளவரசி என்ற நிலையை இழக்கிறார்.. இனி அரச கும்பத்தின் பெயரையும் அவருடைய பெயருக்குப் பின்னால் பயன்படுத்த முடியாது.. கணவரின் குடும்பப் பெயரையே மகோ பயன்படுத்துவார். அதேபோல, அரச குடும்பத்தின் சொத்தும் இவருக்கு இல்லாமல் பறிபோய்விட்டது..

வாழ்த்து

வாழ்த்து

அதாவது, 137 மில்லியன் யென் அதாவது 1.2 மில்லியன் டாலரை மகோ வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். பொதுவாக, அரச குடும்பத்தை சேர்ந்த பெண் சாமான்யரை கல்யாணம் செய்து கொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட தொகை அவருக்கு சீதனமாக தரப்படும்.. அந்த தொகையை தான் மகோ வேண்டாம் என்று அறிவித்தார்.. இரண்டாம் உலக போருக்கு பிறகு, இப்படி அரச குடும்பத்தின் சீதனத்தை நிராகரிக்கும் முதல் பெண் மகோ தான். இத்தனை வருட போராட்டம், எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு பிறகு, இறுதியில் வென்றது மகோவின் மகோன்னதமான காதல்தான்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+