சுலைமானி உடலை புதைத்து சில மணி நேரத்தில் தாக்குதல்.. சொல்லிவிட்டு செய்த ஈரான்.. என்ன நடந்தது?
ஈரான் குவாட்ஸ் ராணுவ தளபதி சுலைமானியின் உடலை புதைத்து சில மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரான் குவாட்ஸ் ராணுவ தளபதி சுலைமானியின் உடலை புதைத்து சில மணி நேரத்தில் அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது.
போர் வந்துவிட்டது.. அமெரிக்கா ஈரான் இடையே நடக்கும் சண்டை இதைதான் உணர்த்துகிறது. இரண்டு நாடுகளும் இன்னும் அதிகாரபூர்வமாக போர் என்று அறிவிக்கவில்லை. ஆனாலும் போருக்கு உண்டான அனைத்து விஷயங்களையும் இரண்டு நாடுகளும் செய்து வருகிறது.
இன்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது, எத்தனை பேர் பலியானார்கள் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.

எப்போது நடந்தது
அமெரிக்க நேரப்படி அங்கு மாலை 5.30 மணிக்கு (அங்கு செவ்வாய் கிழமை) இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்திய நேரப்படி காலை 4.30 மணிக்கு தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் நேரப்படி இன்று அதிகாலை 2 மணிக்கு தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட ஈராக்கிலும் இதே நேரம்தான்.

தூங்கினார்கள்
இந்த தாக்குதல் நடந்த போது அங்கு வீரர்கள் எல்லோரும் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். ஒரு சில வீரர்கள் மட்டுமே காவலில் இருந்துள்ளனர். இது ஒரு வகையில் சர்ப்ரைஸ் தாக்குதல் என்று ஈரான் பாதுகாப்பு தலைவர்கள் வர்ணிக்கிறார்கள்.

அதிகாலை நேரம்
இந்த அதிகாலை நேரத்தை பயன்படுத்திதான் ஈரான் தாக்குதலை நடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 12 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. இது அனைத்தும் 500 கிமீ தூரத்திற்கு அதிகமாக தாக்கும் அதி நவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.

என்ன ஸ்டைல்
ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானி ஸ்டைல் அட்டாக் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்தான் சிரியாவில் இதுபோல் அதிகாலை 4 மணிக்கு தாக்குதல் நடத்தி வந்தார். தற்போது அதேபோல் தாக்குதலை ஈரான் தொடங்கி உள்ளது.

மிக துல்லியம்
இதை பூமியில் இருந்து கட்டுப்படுத்தி தாக்கி உள்ளனர். இதனால் மிக துல்லியமாக ராணுவ தளத்தை இவர்கள் தாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக இதனால் பலத்த சேதம் ஏற்பட்டு இருக்கும். மொத்தம் இரண்டு ராணுவ தளங்கள் இப்படி தாக்கப்பட்டுள்ளது.

இரண்டு இடம்
அதன்படி இர்பில், அல் அசாத் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது. இரண்டுமே அமெரிக்காவின் படை வீரர்கள் அதிகம் இருக்கும் ஈராக் பகுதி ஆகும். இங்குதான் சில நாட்களுக்கு முன் கூடுதல் படை வீரர்கள் குவிக்கப்பட்டார்கள்.

எச்சரிக்கை
ஈரான் ஏற்கனவே நாங்கள் இங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறி இருந்தது. உங்களின் ராணுவ தளவாடத்தில் தாக்க போகிறோம். விரைவில் ஈராக்கை விட்டு வெளியேறுங்கள் என்று அமெரிக்காவிற்கு ஈரான் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

ரேடார் எப்படி
ரேடார் தொடங்கி அனைத்து பாதுகாப்பு சாதனங்களையும் மீறி இந்த ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க ராணுவ படை தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

எப்படி ஆச்சர்யம்
எப்படி ஈரான் ரேடாரில் இருந்து தப்பித்தது என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் ஈராக் உதவி இல்லாமல் இந்த தாக்குதல் நடந்து இருக்காது. ஈராக்கின் பெரிய தலைகளுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.

அமெரிக்கா ஈரான்
ஈரான் தாக்குவதற்கு வசதியாக ஈரானை சுற்றி இருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் அமெரிக்காவின் 27 ராணுவ தளவாடங்கள் இருக்கிறது. இங்கு எல்லாம் ஈரான் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் இங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவ தளபதி
ஈரான் ராணுவ தளபதி கசாம் சுலைமானி கொல்லப்பட்டு ஒரு வாரம் ஆகிறது. நேற்று இரவுதான் அவரின் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில் அவரின் உடல் புதைக்கப்பட்டு சில மணி நேரத்தில் அமெரிக்கா மீது ஈரான் இப்படி ஒரு தாக்குதலை நிகழ்த்தி இருப்பது, மிகப்பெரிய பதிலடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications