காபூல் அட்டாக்: துரிதமாக செயல்பட்ட இந்தியா: ஒரு நாள் முன்பு மட்டும் குண்டு வெடிப்பு நடந்திருந்தால்?
காபூல்: காபூல் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் 90க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியா துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து பலரை மீட்டதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க படைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலை அந்த அமைப்பு நடந்தி உள்ளது.
இந்த தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் பலியானார்கள். இந்த தாக்குதலில் உண்மையான பலி எண்ணிக்கை விவரம் இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதல்
இந்த காபூல் தாக்குதல் மொத்தம் 4 இடங்களில் நடைபெற்றது. அதில் இரண்டு தாக்குதல்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே சில கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்றது. மற்ற இரண்டு தாக்குதல்கள் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அபே கேட் மற்றும் பரோன் ஹோட்டல் கேட் அருகே நிகழ்ந்துள்ளது. இதில் பரோன் ஹோட்டல் கேட் பகுதியில் வெளிநாட்டு மக்கள் பலர் விமானம் ஏறுவதற்காக காத்து இருந்தனர்.

குண்டுவெடிப்பு
இங்குதான் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டு 90க்கும் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். நேற்று இரவு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. சரியாக ஒருநாள் முன்பு, புதன் கிழமை இரவு அதே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்த பரோன் ஹோட்டல் கேட் பகுதியில்தான் சீக்கியர்கள், ஹிந்துக்கள் பலர் காத்து இருந்தனர். இந்தியா ஏற்பாடு செய்திருந்த மீட்பு விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் காத்து இருந்தனர். புதன் கிழமை இரவே அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

டெல்லி சீக்கிய குருத்வாரா
டெல்லி சீக்கிய குருத்வாரா அமைப்பின் உதவியோடு மத்திய அரசு விமானப்படை மூலம் 200க்கும் மேற்பட்டவர்களை புதன் கிழமை இரவே மீட்டது. புதன் கிழமை இவர்கள் லைனில் நின்ற அதே இடத்தில்தான் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடந்து இருக்கிறது. ஒருநாள் மட்டும் தாமதம் ஆகி இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இந்தியாவின் மீட்பு பணிக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
Recommended Video

அசம்பாவிதம்
ஆனால் இந்தியா துரிதமாக செயல்பட்டதால் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் காபூலில் இருந்து இந்திய விமானப்படை மூலம் மீட்கப்பட்ட சீக்கியர்களும், இந்துக்களும், ஆப்கானை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலரும் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். எங்களை இந்தியா துரிதமாக செயல்பட்டு மீட்டு இருக்கிறது, ஒருநாள் மட்டும் தாமதம் ஆகி இருந்தால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும், இந்தியாவிற்கு நன்றி என்று மீட்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications