சீறி வந்த ராக்கெட்: குடியிருப்பு பகுதியில் அட்டாக்: அமெரிக்க தாக்குதலில் அப்பாவி ஆப்கன் மக்கள் பலியா

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய மூன்றே வாரத்தில் மொத்த நாடும் தற்போது உள்நாட்டு போர் பதற்றத்தில் உள்ளது. எப்போது, எங்கிருந்து குண்டு வரும், யார் யார் மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாத அளவிற்கு ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி உள்ளது. இங்கு அமெரிக்கா தொடர்ந்து கடுமையான டிரோன் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்கள் இதில் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Recommended Video

    India, America உடன் இணைந்து பணியாற்றியவர்களை தேடிட்டு இருக்கோம் - Taliban அறிவிப்பு

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல் அசம்பாவிதம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்றது. இரண்டு குண்டு வெடிப்புகளில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் மொத்தம் 170 பேர் பலியானார்கள்.

    இந்த கொடூரமான தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்களும் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் போருக்கு பின்பாக நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. முக்கியமாக அமெரிக்க படையினரை குறி வைத்து இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது.

     பதிலடி

    பதிலடி

    இந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுப்போம். அமெரிக்கர்களின் உயிரை வாங்கிய யாரையும் விட மாட்டோம். எல்லோரையும் தேடி தேடி வேட்டையாடுவோம், விரைவில் அமெரிக்காவிற்கு நீதி கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் பிடன் செய்தியாளர் சந்திப்பில் சபதம் செய்தார். அவர் பழிவாங்குவோம் என்று வெளிப்படையாக அறிவித்த மறுநாளே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் டிரோன் தாக்குதல் நடத்தியது. மறுநாளே ஆப்கானிஸ்தானின் வடக்கு காபூல் பகுதியில் அமெரிக்கா டிரோன் ஸ்டிரைக் நடத்தியது.

    கொலை

    கொலை

    இதில் காபூல் குண்டுவெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட முக்கியமான தீவிரவாதி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இந்த டிரோன் தாக்குதல் கடைசி கிடையாது. இனியும் இதுபோன்ற டிரோன் தாக்குதல்கள் தொடரும். மொத்தமாக டிரோன் தாக்குதலுக்கு பொறுப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் மூளைகள் கொல்லப்படும் வரை தாக்குதல்கள் தொடரும். காபூல் இன்னும் பாதுகாப்பான நிலையை அடையவில்லை. அங்கு இன்னும் குண்டுவெடிப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நாங்களும் டிரோன் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என்று அமெரிக்க படைகள் தெரிவித்துள்ளது.

    இரண்டு அட்டாக்

    இரண்டு அட்டாக்

    இதன் தொடர்ச்சியாக நேற்று இரவும் இன்று காலையும் காபூல் விமான நிலையத்திற்கு அருகே இருக்கும் சில குடியிருப்பு பகுதிகளில் அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தியது. குண்டுகள் பொருத்தப்பட்ட கார்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டது. குண்டு பொருத்தப்பட்ட காரை தாக்கி அழித்ததன் மூலம் இன்னொரு தீவிரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், எப்படி இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பது குறித்த முழு விபரங்கள் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரியவில்லை.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் அப்பாவி பொது மக்கள் அமெரிக்காவின் டிரோன் தாக்குதல்களால் பலியாவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. காபூலில் தொடர்ந்து இதோடு 4 முறை அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்திவிட்டது. இந்த தாக்குதல் எல்லாம் குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் பலர் வசிக்கும் சாதாரண மார்க்கெட் பகுதிகள். இந்த தாக்குதலில் 3 குழந்தைகள் பலியாகிவிட்டதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ந்து அமெரிக்கா குடியிருப்பு பகுதிகளில் டிரோன் அட்டாக் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலர் பலியாவதாக ஆப்கான் ஊடகங்களும், உள்ளூர் மக்களும் குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்கி உள்ளனர்.

    ஈரான்

    ஈரான்

    ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ளூர் பொது மக்களின் ஆதரவை அமெரிக்கா இதே போன்ற டிரோன் தாக்குதல்கள் மூலம்தான் இழந்தது. அதே போன்ற நிலை தற்போது ஆப்கானிஸ்தானில் நடந்து வருகிறது. அதோடு காபூலில் வியாழக்கிழமை குண்டுவெடிப்பு சம்பவத்தின் போதும் அமெரிக்க படைகள் பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பல ஆப்கான் பொது மக்கள் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. குண்டுவெடிப்பில் பலியான 170 பேரில் கணிசமான நபர்கள் அமெரிக்காவின் துப்பாக்கி சூட்டில் பலியாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இது போன்று வெளியாகும் செய்திகள் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பி உள்ளது.

    பதில்

    பதில்

    அமெரிக்கா பாதுகாப்பு நடவடிக்கையாக இது போன்ற தாக்குதல்களை நடத்தினாலும் இதில் அப்பாவி மக்களும் பலியாவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தரப்பும் விளக்கம் அளித்துள்ளது. அதன்பின் டிரோன் தாக்குதல் தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் காபூலில் நடமாடுவது தொடர்பாக எங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் இருப்பிடங்களை குறி வைத்துதான் நாங்கள் தாக்குதல்களை நடத்துகிறோம். இதில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுவது கிடையாது.

     காரணம் என்ன

    காரணம் என்ன

    இந்த தாக்குதல்கள் எல்லாம் காபூல் குண்டுவெடிப்பிற்கான பதிலடி தாக்குதல்கள் மட்டுமே. அங்கு மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே அங்கு அமெரிக்க படைகள் டிரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. குண்டுகள் இருக்கும் வாகனங்கள், வீடுகளை மட்டுமே குறி வைத்து டிரோன் தாக்குதல் நடக்கிறது என்று அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+