For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"மாட்டுக்கறி" தான் எப்பவுமே.. என்னா ஆட்டம்.. ஜாலியாக "படம்" பார்த்த கிம்.. மலங்க விழிக்கும் மக்கள்

வடகொரியா அதிபர் டாக்குமென்ட்ரி படம் பார்த்துள்ளார்

Google Oneindia Tamil News

பியாங்யங்: வடகொரிய அதிபர் கிம் பற்றின ஒன்று வெளிவந்துள்ளது.. ஒரு படத்தை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம்.. ரசித்து ரசித்து பார்த்தாராம்.. அது என்ன படம்னு நீங்களே பாருங்க..!

உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்..

அரபிக் கடலில் சீனாவுக்கு எதிராக வியூகம்: ஓமன் பாதுகாப்பு செயலாளர் 6 நாட்கள் பயணமாக இந்தியா வருகை! அரபிக் கடலில் சீனாவுக்கு எதிராக வியூகம்: ஓமன் பாதுகாப்பு செயலாளர் 6 நாட்கள் பயணமாக இந்தியா வருகை!

அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாராலுமே கண்டுபிடிக்க முடியாது..!

 உடல் எடை

உடல் எடை

பிறகு அவரே மக்கள் முன் திடீரென தோன்றுவார்.. மறுபடியும் அவரே காணாமல் போவார். இப்படித்தான் ஒருமுறை காணாமல்போய் மறுபடியும் திரும்பி வந்தபோது உடல் எடை கூடியிருந்தார்.. ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தது.. ஆனால், அந்த நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட சூழலிலும் கிம் செய்த அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமில்லை.. அந்த நாட்டை கடந்த 2 வருடங்களாகவே வறுமை சூழ்ந்துள்ளது.. இதைதவிர, ஏராளமான பொருளாதார சிக்கல்கள், பொருளாதாரத் தடை, உணவுப் பஞ்சம் என வரிசைக்கட்டி நிற்கின்றன.

புயல்

புயல்

இதற்கு நடுவில் இந்த நாட்டில் புயல் வந்து மேலும் மோசமாக்கிவிட்டது.. இதனால் மக்களுக்கு சாப்பாடு இல்லை.. இவர்கள் அதிகமாக அரிசி, மக்காச்சோளம் தான் சாப்பிடுவார்கள்.. நாட்டில் வறுமை காரணமாக திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.. 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும், பஞ்சம் நீங்கும்வரை மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. ஆனால் இவர் மட்டும் தினமும் மாட்டுக்கறி சாப்பிடுவாராம்..

வறுமை

வறுமை

இப்படித்தான் ஒருமுறை கொரோனாவால் வடகொரிய மக்கள் வறுமையில் தவித்தபோது, ஒரே ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிடுங்கள் என்று சொன்னவர்தான் இந்த கிம்..! இப்படி அறிவிப்புகளாலேயே நடுங்க வைத்து விடுவார்.. இவருடைய தாத்தா 2 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.. அந்த துக்க நாட்கள் நீங்கும்வரை, நாட்டு மக்கள் யாரையுமே சிரிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டார்.. இத்தனைக்கும் அந்த தாத்தாவுக்கு 101 வயசு..!

 பூரிப்பு

பூரிப்பு

இந்நிலையில் கிம் பற்றி இன்னொரு செய்தி வந்துள்ளது.. இவர் ஒரு படம் பார்த்தாராம்.. அதை ரசித்து ரசித்து வியந்து பார்த்துவிட்டு பூரித்து போனாராம்.. அது என்ன படம் என்றால், கடந்த 2 வருடங்களாக வடகொரியா ஏவுகணை தயாரிப்பு, வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த வடகொரிய கம்யூனிச அரசு மேற்கொண்ட முயற்சி உள்ளிட்ட பல சாதனைகளை ஒரு டாக்குமென்ட்ரியாக எடுத்திருந்தது.. அந்த டாக்குமென்டரி படத்தைதான் தயாரித்து, கிம்முக்கு போட்டு காட்டி உள்ளனர்.

 டாக்குமென்ட்ரி

டாக்குமென்ட்ரி

வடகொரிய ஆட்சி குறித்து 110 நிமிடங்களுக்கு அந்த படம் ஓடுகிறதாம்.. "சாதனை ஆண்டு 2021" என்று அந்த படத்திற்கு தலைப்பு.. இந்த படத்தை பார்க்க கிம் வந்தார்.. அவர் பாட்டுக்கு கூலாக வந்து உட்கார்ந்து படத்தை பார்த்தார்.. கைகளை தட்டி உற்சாகமாக காணப்பட்டார்.. அவரது சாதனைகளை டாக்குமென்ட்ரியில் சொல்லும்போதெல்லாம் பூரித்து போனார்.. இந்த 2 வருட காலத்தில்தான், இவர் நாட்டு மக்கள் வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும் இருந்தனர்.. இவர்தான் அவர்களை கொஞ்சமாக சாப்பிட சொன்னார்.. இவர்தான் அவர்களை ஒருநாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட சொன்னார்..

 வேதனை

வேதனை

ஆனால் எல்லாவற்றையும் அம்னீஷியா வந்தவர் போல் மறந்துவிட்டு, தன்னை பற்றின படத்தை ரசித்து பார்த்துள்ளார். இவர் ரசித்து பார்த்ததை, அவர் நாட்டு மக்கள் வயிற்றெரிச்சலுடன் பார்த்து வருகின்றனர்.. இந்த கொடுமையை எல்லாம் உலக மக்கள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர்.. பாவம் வடகொரிய மக்கள்.

மனைவி

மனைவி

இதனிடையே, நேற்று புத்தாண்டையொட்டி மன்சுடே கலையரங்கிற்கு கணவருடன் வந்த ரி சோல் ஜுவை மக்கள் ஆரவாரம் பொங்க வரவேற்றனர்... பின்னர் கிம்மும் அவருடைய மனைவியும் அரங்கிலிருந்த கலைஞர்களுடன் கைகுலுக்கினர். அனைவரும் சேர்ந்து போட்டோவும் எடுத்துக் கொண்டனர்.. கடந்த சில மாதங்களாக கிம் மனைவி வெளியே வராமலேயே இருந்தார்.. இப்போதுதான் 5 மாதங்கள் கழித்து வெளியே வந்துள்ளார். இந்த போட்டோ வைரலாகிறது.

English summary
Kim Jong Un: North Korean President seen limping and riding horse in new film about his 'achievements'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X