ஆபரேஷன் சிந்தூர்.. இறங்கி அடிக்கும் இந்தியா.. பயத்தில் எமர்ஜென்சியை அறிவித்த பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என சொல்லப்பட்டு வந்தது. இதற்கிடையே 'ஆபரேஷன் சிந்துார்' கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலில் ஒன்றாக இது கருதப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது இந்தியா பதிலடி தர வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இதற்கிடையே 'ஆபரேஷன் சிந்துார்' கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், லாகூர் உட்பட பாகிஸ்தான் விமான நிலையங்களில் 48 மணி நேரம் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவின் ராணுவ தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் தரப்பில் அறிவித்துள்ளது. மேலும் இன்றைய தினம் பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டமும் நடைபெறுகிறது.
-
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம்












Click it and Unblock the Notifications