For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலுக்கும் ஜிக்கா வைரஸ்... 2018 வரை கருத்தரிக்காதீர்கள் என எல் சால்வடார் பெண்களுக்கு அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி: லத்தீன் அமெரிக்க நாடுகளை ஜிக்கா வைரஸ் பாதிப்பு உலுக்கி எடுத்து வருகிறது. இதன் விளைவாக தனது நாட்டுப் பெண்களுக்கு, 2018ம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை தள்ளிப் போடுங்கள் என்று எல் சால்வடார் நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

1940களில்தான் முதல் முறையாக ஜிக்கா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அது தற்போது உயிர்களில் பலி வாங்க ஆரம்பித்துள்ளது.

குழந்தைகளைத்தான் இந்த வைரஸ் தாக்குகிறது. எனவே உயிர்ப்பலியும் குழந்தைகளாகத்தான் உள்ளனர். பிரேசில் நாடு தற்போது இந்த ஜிக்கா வைரஸ் பாதிப்பால் திணறி வருகிறது. இதையடுத்து தென் அமெரிக்க நாடுகள் உஷாராகி வருகின்றன.

கொசு மூலம் பரவும் வைரஸ்

கொசு மூலம் பரவும் வைரஸ்

இந்த ஜிக்க வைரஸ் பிற வைரஸ்களைப் போலவே கொசுக்கள் மூலம்தான் பரவுகிறது. ஆனால் இது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். கருவில் உள்ள குழந்தைகளை இது தாக்குகிறது.

சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகள்

சிறிய தலையுடன் பிறக்கும் குழந்தைகள்

இது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் சிசுக்களுக்கு தலை சிறிதாக இருக்கும். மூளையைத் தாக்கும் இந்த வைரஸால் குழந்தைகள் படிப்படியாக நலிவுற்று உயிரிழக்கின்றன.

பல்வேறு விதமான பாதிப்புகள்

பல்வேறு விதமான பாதிப்புகள்

இதுதவிர குழந்தைகளின் மனநல பாதிப்பு, மூளையின் பெருமூளை செயலிழப்பது, கண் பார்வை பறி போதல், காது கேட்காமல்போவது உள்ளிட் பிரச்சினைகளும் ஏற்பட்டு கடைசியில் உயிரிழப்பில் போய் முடிகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து

ஆப்பிரிக்காவிலிருந்து

இந்த நோயானது ஆப்பிரிக்காவிலிருந்து பரவியுள்ளது. இந்த வைரஸைப் பரப்பும் கொசுவின் பெயர் ஏடிஸ் எகிப்தி என்பதாகும். தற்போது லத்தீன் அமெரிக்காவில் பிரேசில் நாட்டில் பரவியுள்ள போதிலும்,

முதல் முறையாக உயிரிழப்பு

முதல் முறையாக உயிரிழப்பு

முன்பு இந்த வைரஸ் தாக்குதலுக்குள்ளான குழந்தைகள் உயிரிழப்புக்குள்ளாகவில்லை. ஆனால் தற்போது உயிர்ப்பலி ஏற்பட ஆரம்பித்துள்ளது. பிரேசிலில் அடுத்தடுத்து பல குழந்தைகள் இறந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு

ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பு

இதுவரை 4000 குழந்தைகள் வரை பிரேசிலில் பாதிப்புக்குள்ளாகியுள்ள. இதில் 400க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் முற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்காவிலேயே பெரிய நாடு பிரேசில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம் தரிக்காதீர்கள்

கர்ப்பம் தரிக்காதீர்கள்

இதையடுத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் முன்னெச்சரிக்கையில் இறங்கியுள்ளன. இதில் எல் சால்வடார் நாடு, தனது நாட்டு பெண்களை கர்ப்பம் தரிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளது.

2018 வரை வேண்டாம்

2018 வரை வேண்டாம்

இதுகுறித்து அந்த நாட்டு அரசு விடுத்துள்ள உத்தரவில் 2018ம் ஆண்டு வரை கர்ப்பம் தரிப்பதை நமது பெண்கள் தள்ளிப் போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

20 நாடுகளில் பாதிப்பு

20 நாடுகளில் பாதிப்பு

இதற்கிடையே, லத்தீன் அமெரிக்காவில் பிரேசில், பார்படாஸ், பொலிவியா, கெளதமாலா, பியூர்டோரிக்கோ, பனாமா உள்பட 20 நாடுகளில் ஜிக்கா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அமைப்பு தெரிவித்துள்ளது.

எல் சால்வடாரில் உயிரிழப்பு இல்லை

எல் சால்வடாரில் உயிரிழப்பு இல்லை

எல் சால்வடார் நாட்டில் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை. அங்கு கடந்த நவம்பர் மாதத்தில் ஜிக்கா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து எல் சால்வடார் நாட்டு சுகாதார அமைச்சர் எடுவர்டோ எஸ்பினோஸா கூறுகையில், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். இருப்பினும் 2018ம் ஆண்டு வரை கர்ப்பம் ஆகாமல் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிலும் பாதிப்பு

அமெரிக்காவிலும் பாதிப்பு

தென் அமெரிக்கா மட்டுமல்லாமல் வட அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளதாம். அமெரிக்காவில் 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
The rapid spread of the Zika virus has prompted Latin American governments to urge women not to get pregnant for up to two years, an extraordinary precaution aimed at avoiding birth defects believed to be linked to the mosquito-borne illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X