செல்பி வெறித்தனத்தின் உச்சகட்டம்.... தாயின் பிணத்தை தோண்டி எடுத்து செல்பி எடுத்த மகன்!
பெய்ரூட்: லெபனானில் புதைக்கப்பட்ட தனது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் சுடுகாட்டுக் காவலர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
எங்கு பார்த்தாலும் செல்பி பைத்தியக்காரத்தனம் அதிகரித்து விட்டது. யாரைப் பார்த்தாலும் செல்பி மோகம் பிடித்து அலைகிறார்கள். இது சில நேரங்களில் விபரீதமாகவும் போய் விடுகிறது. செல்பி எடுப்பது என்பது ஒரு உளவியல் பிரச்சினை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றும் கூறியுள்ளது. இந்த நிலையில் லெபனானில் ஒரு அதி பயங்கரமான செல்பி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர் டெப் சாய்ஃலி. இவர் சமீபத்தில் தனது தாயாரின் பிணத்துடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.

தாய் பிணத்துடன் செல்பி...
அதிலும், பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமான அவரது தாயாரின் பிணத்தை தோண்டி எடுத்து, அதனுடன் அவர் செல்பி எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அவரிடம் பேட்டி எடுத்தது. அந்த சந்திப்பில் மனநல மருத்துவர் ஒருவரும் பங்கேற்றார்.
அப்போது பேசிய டெப், தனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்ததாகவும், ஆனால், மரணங்கள் தனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை தான் நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை தான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும், ஆனால், தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மனநல பாதிப்பில்லை...
டெப்பின் இந்த பேட்டியைப் பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிச்சயம் டெப்பிற்கு மனநல பாதிப்பு இருக்க வேண்டும் என அவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால், டெப்பின் பேச்சு மற்றும் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என இந்த பேட்டியில் கலந்து கொண்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏன் இவ்வாறு டெப் சடலங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications