நேபாள அதிபர் பாதுகாப்பு வாகனங்கள் மீது இந்திய வம்சாவளி மாதேசிகள் தாக்குதல்...பெட்ரோல் குண்டு வீச்சு
காத்மாண்டு:நேபாள அதிபர் பித்தியா தேவி பண்டாரி, தரிசனத்துக்காக சென்ற கோவிலில் பெட்ரோல் குண்டுகளை வீசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதேசிகள் நேபாளத்தில் சிறுபான்மை இன மக்களாக உள்ளனர்.இவர்கள் விகிதாச்சார பிரநிதித்துவம் வழங்கக் கோரியும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றும், இது குறித்து அரசியல் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,அந்நாட்டு அதிபர் பித்தியா தேவி பண்டாரி ஜனக்பூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற கோவிலுக்கு இன்று தரிசனத்துக்காகச் சென்றார். அப்போது மாதேசி மோர்ச்சா இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்பு கொடி காட்டினர்.
சிலர் திடீரென அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.அப்போது அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர் அவரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அதனையடுத்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைந்து போகச் செய்தனர். அப்போது, சிலர் அதிபர் சென்ற கோவிலில் பெட்ரோல் குண்டுகளை எரிந்தனர். இதில் எந்தவித காயமும் இன்றி அதிபர் பிந்தியா தேவி பாதுகாப்பாக மீட்டுச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், நாளை அங்கு தரிசனத்துக்காக செல்ல இருந்த நேபாளத்துக்கான இந்திய தூதர் ரஞ்சித் ரே தனது பயணத்தை ரத்து செய்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications