சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 8.0 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அடிலெய்ட்: சாலமன் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.0 என பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி்ததுள்ளது. சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மிகச் சிறிய தீவுக்கூட்டம்தான் சாலமன் தீவு. இங்கு நேற்று இரவு இந்திய நேரப்படி 11 மணிக்கு கடலுக்கு அடியில் மிகச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சாலமன் தீவின் கிராகிரா பகுதியில் கடலுக்கு அடியில் தென்மேற்கே 70 கி.மீ தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் சாலமன் தீவுக்கு அருகில் உள்ள பாபுவா நியூ கினியா பகுதிகளில் அடுத்த 3 மணிநேரத்தில் சுனாமி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
சாலமன் தீவுகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். பூகம்பம் மற்றும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் பீதி நிலவுகிறது. சாலமன் தீவு, அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications