மால்டாவுக்கு போங்க.. ஹோட்டலில் தங்குங்கள்.. 18 ஆயிரத்தை வாங்கிட்டு வாங்க.. அரசின் சூப்பர் ஆஃபர்!
வல்லேட்டா: 3 நாட்கள் தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ 18 ஆயிரம் வழங்கப்படும் என மால்டா அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க இது போன்ற ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், விலங்கியல் பூங்காக்கள் உள்ளிட்டவை மூடியிருந்தன.
பின்னர் ஒவ்வொன்றாக தளர்வுகள் அளிக்கப்பட்டு பொது முடக்கம் தளர்வுடன் கூடியதாக அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பரவலால் ஒரு சிலர் மட்டுமே சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள்.

3 நாட்கள்
இதனால் சுற்றுலாத் தலங்கள் களையிழந்த நிலையில் காணப்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு புதிய சூப்பர் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வரும் நபர்கள் 3 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.

27 சதவீதம்
அவ்வாறு தங்கினால் ரூ 18 ஆயிரம் வழங்கப்படும். அவர்கள் வெளிநாட்டு பயணிகளாக இருத்தல் வேண்டும். இந்த அறிவிப்பு பெரும்பாலானோரை கவர்ந்துள்ளது. வரும் கோடையில் மெடிட்டரேனியன் தீவுகள் என சொல்லப்படும் இந்த மால்டாவின் பொருளாதாரத்தில் 27 சதவீதத்திற்கு மேலாக சுற்றுலா மூலம் கிடைக்கிறது.

கொரோனாவால் பாதிப்பு
ஆனால் இது கொரோனாவால் பாதிக்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு 2.7 மில்லியன் வெளிநாட்டினர் சுற்றுலா வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 80 சதவீதத்திற்கு மேலாக சரிவை சந்தித்துள்ளது. 5 நட்சத்திர ஹோட்டலில் அறைகளை ஒதுக்கினால் 200 யூரோக்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்கினால் 150 யூரோக்களும், 3 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கினால் 100 யூரோக்களும் வழங்கப்படும்.

சுற்றுலா பயணிகளின் வருகை
இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இதன் மூலம் 35 ஆயிரம் பேர் பலனடைவார்கள் என தெரிகிறது. இங்கு கொரோனா பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியனில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்படும் நாடுகளில் மால்டா முக்கியமானது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications