வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன்
25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்று ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்ரிட்: வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்த கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை.. ஸ்பெயினில் நடந்திருக்கிறது.
பெண்களை தங்களின் அடிமைகளாகவும், தனக்கு வீட்டு வேலை செய்பவர்களாகவும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் போகப்பொருளாகவும் பார்க்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சம உரிமை, சுதந்திரம் இவற்றையெல்லாம் தருவதற்கு பழமைவாதிகள் தயாராக இல்லை.பிற்போக்குத்தனமாக யோசிப்பவர்களுக்கு மண்டையில் உரைக்கும் வகையில் நீதிமன்றம் அவ்வப்போது கொட்டுகிறது.
பெண்களை வீட்டு வேலை செய்ய பயன்படுத்தவே பலர் திருமணம் செய்யும் போக்கு நிலவுகிறது. அவர்களுக்கு இந்த தீர்ப்பு நிச்சயம் கசப்பாக இருக்கும். இந்த தீர்ப்பு மட்டும் இந்தியாவில் இனி வரத்தொடங்கினால் பலருக்கும் தூக்கமே போய்விடும். ஆனாம் அப்படி என்ன தீர்ப்பு.. பெண்ணுக்கு ஆதரவான தீர்ப்பு வாருங்கள் பார்ப்போம்.

விவாகரத்து
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் இவானா மோரால் இவருக்கு கடந்த 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு திருமணமாகி 25 ஆண்டுகளான பின்னர் இருவரும் பிரிந்தனர். இவானாவிற்கு நீதிமன்றம் விவகாரத்தும் அளித்து. தன்னை வீட்டு வேலைக்காகவே திருமணம் செய்த கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மனைவி அவரிடம் இருந்து இழப்பீடும் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

1.7 கோடி சம்பளம்
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்ற நீதிபதி லவுரா ருயிஸ் அலமினோஸ், 25 ஆண்டுகளாக ஊதியமின்றி இவானா வீட்டு வேலைகளைச் செய்து வந்திருக்கிறார். அவருக்கு குறைந்தபட்ச ஊதியம் ஒதுக்கி 25 ஆண்டுகளுக்கு (1995ம் ஆண்டு ஜூன் முதல் 2020 டிசம்பவர் வரை ) கணக்கிட்டு ரூ.1.7 கோடி ஊதியமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

வீட்டு வேலை
சுத்தம் செய்வது, கழிவறை கழுவுவது, சமையலறையை பேணுவது என வீட்டை பராமரிக்கும் வேலைகளை ஆணும் பெண்ணும் சரிசமமாக பங்கிட்டு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, அவ்வாறு சமமாக பிரித்துக்கொள்ளவில்லையெனில், வீட்டில் அதிக வேலை செய்பவருக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நல்ல தண்டனை
அதேநேரம் இவனாவின் குழந்தைகளில் ஒருவருக்கு 18 வயதுக்கு கீழ் உள்ளது. ஒரு குழந்தைக்கு 18 வயதிற்கு மேல் உள்ளது. குழந்தைகளின் பராமரிப்புக்காகவும் பணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு குறித்து இவானா கூறுகையில், "நான் என் கணவனையும் வீட்டையும் கவனித்துக்கொண்டே, வீட்டு வேலைகளுக்கு பிரத்தியேகமாக என்னை அர்ப்பணித்துள்ளேன். என் கணவர் என்னை உண்மையில் ஒரு வீட்டு வேலை செய்யும் வேலைக்காரியாகவே நடத்தினார். அப்போது குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்பதற்காக, வேறு எதுவும் செய்ய முடியாத இடத்தில் இருந்தேன். இந்த தண்டனைதான் அவருக்கு தகுதியான தீர்ப்பு, வரவேற்கப்பட வேண்டிய நல்ல தீர்ப்பு " இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications