டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தியர்கள் ஆதரவை பெற்றுத்தர உழைத்தது இவர்கள்தான்!
வாஷிங்டன்: தெற்காசியாவை சேர்ந்த மக்கள் தொடர்பு நிறுவனமான அட் மார்க் கம்யூனிகேஷன், அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்காக உழைத்துள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை பெற்றுத்தருவதில் இந்த நிறுவனம் அதிகம் பங்கு வகித்துள்ளது.
அட் மார்க் கம்யூனிகேஷன் என்ற தெற்கு ஆசிய விளம்பர நிறுவன தலைவர் சையமால் மோடி கூறுகையில், "அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்றார்.

ஜனநாயக இந்து கூட்டமைப்புடன் இணைந்து 'சியாமல் மோடி-சலப் குமார் ஆகியோர் 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்' என்ற பிரசாரத்தை நடத்தியிருந்தனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் வாக்குகளை கவர இந்த பிரசாரம் நடத்தப்பட்டது. அமெரிக்க வாழ் இந்தியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட முதலாவது பிரசார பயணம் இதுவாகும்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இதுபோன்ற பிரசாரம் நடத்தியதில் மகிழ்ச்சி என்கிறார் சையமால் மோடி.
கடந்த அக்டோபரில் இந்த கூட்டமைப்பினர் எடிசன் பகுதியில் நடத்திய நிகழ்ச்சியில் டொனால்ட் ட்ரம்ப் தலைமை விருந்தினராக பங்கேற்றார். சுமார் 10,000 பேர் இதில் பங்கேற்றனர். பிரபுதேவா, மலைகா போன்றோரின் கலை நிகழ்ச்சிகள் அதில் நடத்தப்பட்டன.
"இந்திய மக்களின் நம்பிக்கையை பெற ட்ரம்ப் நல்ல முயற்சிகளை எடுத்தார். இது இதற்கு முன்பு எந்த அதிபர் வேட்பாளரும் செய்யாதது. இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலாவது அதிபர் வேட்பாளரும் அவரே. இப்படி ஒரு நிகழ்வில் அங்கம் வகித்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்று சையமால் மோடி மேலும் கூறினார்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில சேனல்களும், சில பிராந்திய சேனல்களும், அமெரிக்க சேனல்களில் சிலவும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருந்தன. இப்படியாக அந்த மக்கள் தொடர்பு நிறுவனம் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு தற்போது கை மேல் பலன் கிடைத்துள்ளது. அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications