டிரம்ப் மூலம் பாக்.கிற்கு இந்தியா வலைவிரித்தது.. பகீர் கிளப்பும் நவாஸ் ஷெரிப் மகள்.. திடுக் புகார்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா வலைவிரித்தது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
Recommended Video
இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா வலைவிரித்தது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சனையில் நேற்று அதிரடி திருப்பம் நிகழ்ந்தது. ராஜ்ய சபாவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இது இந்தியாவில் மட்டுமில்லாமல் பாகிஸ்தானிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக இதனால் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

என்ன
இந்த நிலையில் காஷ்மீர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்த பின்புதான் இப்படி நடந்து இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். காஷ்மீர் குறித்து இரண்டு வாரம் முன் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியா தயாராக இருக்கிறது. பிரதமர் மோடி இந்த பிரச்சனையை தீர்க்க தயாராக இருக்கிறார். கடந்த மாதம் நாங்கள் ஜப்பானில் சந்தித்த போது கூட அவர் இதை குறித்து பேசினார்.

என்ன உதவி
காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தை நடத்த உதவ வேண்டும் என்று கூறினார். நான் கண்டிப்பாக உதவ தயார், என்று டிரம்ப் பேசினார். அவரின் இந்த கருத்தை தவறு என்று மத்திய அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்ரான்
ஆனால் அமெரிக்காவின் இந்த விருப்பத்தை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டது. காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்டால் சரியாக இருக்கும். பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க அமெரிக்காவின் ஆதரவு தேவை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளிப்படையாக குறிப்பிட்டார்.

தவறு
இதைவைத்துதான் தற்போது பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக குரல்கள் எழும்ப தொடங்கி உள்ளது. அதில் முக்கியமான குரல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் சொன்னது. அவர் இம்ரான் கானை தோல்வி அடைந்துவிட்டதாக கூறி மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

என்ன கூறினார்
மர்யம் நவாஸ் ஷெரிப் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தோல்வி அடைந்துவிட்டார். பாகிஸ்தான் டிரம்பிடம் காஷ்மீர் விஷயத்தில் உதவி கேட்டு இருக்க கூடாது. அப்படி கேட்டதன் மூலம் அவர் இந்தியாவின் வலையில் சிக்கிவிட்டார். இந்தியா திட்டமிட்டுதான் இப்படி செய்து இருக்கிறது. இந்தியா திட்டமிட்டது கூட இம்ரானுக்கு தெரியவில்லை.

காலி
பாகிஸ்தானை இந்தியா, டிரம்ப் மூலம் மறைமுகமாக வீழ்த்தி உள்ளது. ஆனால் இம்ரான் கான் பாகிஸ்தானில் தனது அரசியல் எதிரிகளை காலி செய்ய உழைத்துக் கொண்டு இருக்கிறார். காஷ்மீரில் நடந்த இந்த பிரச்சனைக்கும் எதிராக நாளை சர்கோதாவில் நான் பேரணி செல்ல இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார், மர்யம் நவாஸ் ஷெரிப்.

என்ன அரசியல்
அவரின் இந்த பேச்சு பாகிஸ்தான் அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் பாகிஸ்தானை இந்தியா அமெரிக்காவின் உதவியுடன்தான் வீழ்த்தியதா. டிரம்ப் பேட்டி கொடுத்தது பாகிஸ்தானை வலையில் சிக்க வைக்கத்தானா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications