உள்ளே வரும் ராயல் டீம்.. பாகிஸ்தான் உடன் போர்? சவுதிக்கு ஜெய்சங்கர் அனுப்பிய மெசேஜ்.. திக்திக்
ரியாத்: சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் (EAM) எஸ் ஜெய்சங்கர் அவசர சந்திப்பை மேற்கொண்டார். அடெல் அல்ஜுபைருடனான சந்திப்பின் போது, பாகிஸ்தான் மீதான தாக்குதல் குறித்தும், தீவிரவாதத்தை உறுதியாக எதிர்கொள்வது குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தையும் ஜெய்சங்கர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
2019ல் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளுக்கு எதிராக பாலக்கோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பாகிஸ்தான் பாலக்கோட்டில் நடந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுத்து வந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் தலையிட்ட சவுதி அரேபியா பாகிஸ்தானை பதில் தாக்குதல் நடத்த விடாமல் தடுத்தது.

அப்போது பிரதமராக இருந்த இம்ரான் கான் உடன் சவுதி அரேபியா பல கட்ட கூட்டங்களை ஆலோசனைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த சவுதி அரேபியா சந்திப்புகள் அப்போது பிரபலம். இப்போது மீண்டும் பாகிஸ்தான் பதிலடி தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் மீண்டும் சவுதி அரேபியா சீனுக்குள் வந்துள்ளது.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபைருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் (EAM) எஸ் ஜெய்சங்கர் அவசர சந்திப்பை மேற்கொண்டார். இதில் இந்தியா பாகிஸ்தான் போர் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.
போர் அச்சம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிக்கையில் இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளார். பாகிஸ்தானில் 5 இடங்களில் கோழைத்தனமான தாக்குதல்களை எதிரிகள் நடத்தி உள்ளனர். போர் நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமையும் உள்ளது.
பலமான பதிலடி கொடுக்கப்படும். முழு தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளுடன் நிற்கிறது. பாகிஸ்தான் ஆயுதப்படைக்கு ஆதரவாக நாங்கள் இருப்பும். மேலும் முழு பாகிஸ்தான் நாட்டின் மன உறுதியும் உங்களுடன் உள்ளது. இந்தியாவை எப்படி சமாளிப்பது எப்படி பதிலடி தருவது என்று தெரியும். பாகிஸ்தான் தேசமும் பாகிஸ்தான் ஆயுதப் படைகளும் எதிரியை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும். எதிரி அவர்களின் தீய இலக்குகளில் வெற்றிபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்களின் நோக்கங்கள் வெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பால் இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகாரபூர்வ போர் தொடங்கிவிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடரும் மோதல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாம்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.
இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.
இது போக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications