For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை அமைக்க உதவும் ’மின் காசு’!

By Shankar
Google Oneindia Tamil News

சான் ப்ரான்ஸிஸ்கோ(யு.எஸ்): சிலிக்கான் வேலியில் உள்ள செல்போன் கட்டண செலுத்து நிறுவனமான 'மின் காசு' ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ்த் துறைக்கு நிதி திரட்டுவதற்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

அதி நவீன தொழில் நுட்பத்துடனும், க்ரெடிட் கார்டு உள்ளிட்ட தகவல்களுக்கு கூடுதல் பாதுகாப்புகளுடனும் கூடிய 'மின் காசு' (Minkasu) என்ற புதிய மொபைல் ஆப் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

Minkasu helps to set up Tamil Chair in Harvard University

இந் நிறுவனத்தை உருவாக்கியவர்கள் அன்பு கவுண்டர், சுப்பு லட்சுமணன், நவீன் துரைசாமி ஆகிய மூவரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். அமெரிக்காவில் குடியேறி, நீண்டகாலமாக அங்கே வசித்து வருகிறார்கள்.

இந்த மொபைல் ஆப் பில் முக்கிய அம்சம் என்னவென்றால், க்ரெடிட் கார்டு விவரங்கள் சேமித்து வைக்கப்படுவதில்லை. க்ரெடிட் கார்டு விவரங்கள் வியாபார நிறுவனங்களுடனும் பகிரப்படுவதில்லை. ஒரு வேளை மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டாலும், க்ரெடிட் கார்டு விவரங்கள் ஹேக்கருக்கு கிடைக்காது. இந்த தொழில் நுட்பங்களுக்காக அமெரிக்காவில் மூன்று காப்புரிமைகள் (Patents) பெற உள்ளார்கள்.

'மின் காசு' ( Minkasu) மொபைல் ஆப் ஐ டவுண்லோட் செய்து விவரங்களைப் பதிவு செய்து விட்டால், ஆன்லைன், கடைகள், மொபைல் ஆப் உள்ளிட்ட அனைத்து விதமான வர்த்தக பரிமாணங்கள் மூலமாக சுலபமாக பணம் செலுத்த முடியும்.

இத்தகைய வசதிகள், உலகின் பிரபலமான ஆப்பிள் பே, ஆண்ட்ராய்ட் பே உள்ளிட்ட மற்ற மொபைல் பேமண்ட் ஆப்களில் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக ஆப்பிள் பே, ஆண்ட்ராய்ட் பே மூலம் அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் கடைகளில் பணம் செலுத்த முடியாது.

தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந் நிறுவனம், அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் எந்தவித சேவைக் கட்டணமும் இல்லாமல், நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற, உதவி செய்கிறார்கள்.

நன்கொடையாளர்களுக்கும் பணம் செலுத்துவது மிக எளிதாக இருக்கிறது. இது வரையிலும் 12 தன்னார்வ அமைப்புகளுக்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறார்கள்.

தற்போது ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை அமைப்பதற்காக 'Tamil Chair Inc' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் 'மின் காசு' கை கோர்த்துள்ளது.

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நன்கொடையாளார்கள் எளிதாக நன்கொடை செலுத்த 'மின் காசு' வகை செய்துள்ளது.

மின் காசு ஆப்பில் நன்கொடை செலுத்துபவர்களிலிருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் இருவருக்கு பிப்ரவரி 7ம் தேதி சான் ஓசே வில் நடைபெற உள்ள American Super Bowl (கால்பந்து ) இறுதிப் போட்டிக்கு டிக்கெட் வழங்கப்படும்.

மேலும் மின் காசு ஆப் மூலம் ஹார்வர்டு இருக்கைக்கு நன்கொடை செலுத்தும் போது, மின் காசு நிறுவனமும் நன்கொடை கொடுக்கும்.

மின் காசு ஆப்பில் HTC என்று டைப் செய்து நன்கொடை தொகையை குறிப்பிட்டு Pay பட்டனை அழுத்தி கை ரேகையை பதிவு செய்தால் போதும். நன்கொடை பணம் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு சென்று விடும்.

ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைக்க 6 மில்லியன் டாலர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நன்கொடையாளர்களாக டாக்டர் விஜய் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சுந்தரம் சம்பந்தம் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு மில்லியன் டாலர் வழங்கியுள்ளார்கள். Tamil Chair Inc தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைக்கப்பட்டு 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் மீதமுள்ள நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.minkasu.com மற்றும் ttp://www.harvardtamilchair.com இணைய தளங்களில் காணலாம்.

விரைவில் 6 மில்லியன் டாலர்களும் திரட்டப்பட்டு ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கை அமைய வாழ்த்துவோம்.

English summary
Minkasu, an US based mobile Payment company run by Tamils is helping a lot to the effort of setting a Tamil Chair in Harvard University, US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X