அமெரிக்க தூதரகத்தில் தீ வைப்பு! திடீரென உள்ளே இறங்கிய மர்ம கும்பல்.. 12 பேர் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே கமேனி கொலையைக் கண்டித்து இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் நடந்த களேபரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். நேற்று நடந்த இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். முதலில் இதை ஈரான் மறுத்தாலும் கூட பிறகு கமேனி உயிரிழப்பை உறுதி செய்தது.

பாகிஸ்தானில் பதற்றம்
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.. இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. திடீரென அங்கு வந்த பெரும் கூட்டத்தினர் அமெரிக்கத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தூதரகத்தின் வெளியே போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீச, அவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர். இருப்பினும், அதையும் தாண்டி தூதரக வளாகத்திற்குள் புகுந்த பலர், பிரதான கட்டிடத்தின் ஜன்னல்களையும் கதவுகளையும் உடைக்க முயன்றனர். கட்டிடத்தின் சில பகுதிகள் எரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
உயிரிழப்பு
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும், 30 பேர் காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஈரான் தூதரகம்
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள ஈரான் தூதரகம், அமெரிக்காவின் செயலை கண்டித்துள்ளது. இதனைக் கோழைத்தனமான, அருவருப்பான மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்தது. சுதந்திரம், கண்ணியம் மற்றும் எதிர்ப்பு ஆகிய கொள்கைகளுக்கான கமேனியின் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்ததுள்ளது ஈரான் தூதரகம்!
ஈராக்
ஈராக்கின் பாக்தாத்திலும், போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டனர். பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைக் கலைக்க முயற்சி செய்தனர். இப்படி உலகெங்கும் பல இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் பதற்றம் நொடிக்கு நொடி மோசமாகிக் கொண்டே போகிறது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லக்னோவில் மக்கள் அலி கமேனி கொலையை எதிர்த்துப் போராடினர். முக்கிய ஷியா மதகுருவான மௌலானா யாசப் அப்பாஸ், இந்த சம்பவத்தை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று வர்ணித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "லக்னோவின் இமாம்பாராவில் இரவு 8.30 மணிக்குப் பெரிய போராட்டங்களும் நடத்தப்படும். அனைத்திந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியம் மூன்று நாட்கள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ளது. இக்காலத்தில் நாங்கள் அனைவரும் கறுப்பு உடைகள் அணிந்து, எங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றுவோம்" என்றார்.
மன்னிக்க முடியாத குற்றம்
அதேபோல இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், இக்கொலையை "மன்னிக்க முடியாத குற்றம்" என்று குறிப்பிட்டது. உலகெங்கிலும் உள்ள சுதந்திரமான மற்றும் விடுதலை விரும்பும் அரசுகள் இந்தக் குற்றத்தை உறுதியாகக் கண்டிக்க வேண்டும் என்றும் சட்ட மீறல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு முன்பு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஈரானைத் தாண்டியும் இது பிராந்திய போராக மாறும் ஆபத்தும் உருவாகியுள்ளது. அப்படி ஒருவேளை பிராந்திய போராக வெடித்தால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கும். மேலும், போரையும் அவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியாது என்பதால் உலக நாடுகள் அங்கு நிலவும் சூழலை உற்றுக் கவனித்து வருகிறார்கள்.
-
முடங்கும் அமேசான் சேவைகள்? ஈரான் சரமாரி ‘அட்டாக்’.. பற்றி எரியும் பஹ்ரைனால் டிரம்புக்கு பிரஷர் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா?












Click it and Unblock the Notifications