குரங்கால் மூண்ட கலவரம்: 16 பேரை பலி கொண்டது!
லிபியாவில் சாலையில் சென்ற சிறுமிகளிடம் சேட்டை செய்த குரங்கால் வெடித்த கலவரத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
திரிபோலி :லிபியாவில் சாலையில் சென்ற பள்ளி சிறுமிகளிடம் குரங்கு ஒன்று வம்பிழுத்ததால் பெரும் கலவரம் வெடித்தது. இதில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்ட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திரிபோலியில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சபா என்ற நகரில் உள்ள வீடு ஒன்றில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்தது. இந்த குரங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாலையில் சென்ற 3 பள்ளி சிறுமிகள் மேல் பாய்ந்து அவர்களை அச்சுறுத்தியதோடு ஒரு சிறுமி அணிந்திருந்த முகத்திரையையும் கிழித்துள்ளது.

இதனால் அச்சமடைந்த சிறுமிகள் தங்களின் குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், குரங்கு மற்றும் அதனை வளர்த்த 3 பேரையும் சுட்டுக்கொன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சிறுமிகளின் குடும்பத்தினரை தாக்கியுள்ளனர்.
இந்த சண்டை கலவரமாக வெடித்ததில் சபா நகரே போர்க்களம் போல் காட்சியளித்தது. இதையடுத்து பீரங்கிகளுடன் சென்ற ராணுவத்தினர் கலவரத்தைக் கட்டுப்படுத்தி நிலைமையை சீராக்கினர்.
இந்த கலவரத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரங்கு செய்த சேட்டையால் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சபா நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications