For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்தக்களறி.. ஒரே நாளில் 1,428 டால்பின்கள் கொன்று குவிப்பு.. செந்நிறமான தீவு.. வலுக்கும் எதிர்ப்பு

ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

டென்மார்க்: ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. டென்மார்க் ஃபாரோ தீவுகளில்தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்து பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது ஃபேரோ என்ற தீவு.. இங்கு வருடா வருடம் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்..

மாஸ்டர்பிளான்.. எடப்பாடிக்கு எதிராக சீறிய ராமதாஸ்.. 7 மாவட்டங்களுக்கு பாமக குறி.. அதிமுகவிற்கு செக்! மாஸ்டர்பிளான்.. எடப்பாடிக்கு எதிராக சீறிய ராமதாஸ்.. 7 மாவட்டங்களுக்கு பாமக குறி.. அதிமுகவிற்கு செக்!

கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது.. இதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள்..

 திருவிழா

திருவிழா

அப்படித்தான், நேற்றைய தினம், ஃபேரோ தீவில் மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.. அப்போது, திருவிழா கொண்டாட்டத்தின்போது 1,400-க்கும் மேற்பட்ட டால்பின்களை பிடித்து வந்து கொன்றுள்ளனர்.. இதற்காகவே கடலில் மிதந்த டால்பின்களை கொண்டு வர, பிரத்யேகமாக மோட்டார் படகுகள் தயார் செய்யப்பட்டு, நீண்ட வரிசையில் கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன...

 செந்நிறம்

செந்நிறம்

படகுகள் மூலம் 1,428 டால்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பிறகு அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். டால்பின்களின் உடல்களில் இருந்து ரத்தம் உதிர்ந்து கொண்டே இருந்தது.. இதனால், கடற்பரப்பு முழுவதும் செந்நிறமாக காட்சியளித்தது...

கொடூரம்

கொடூரம்

இப்படி வடக்கு அட்லான்டிக் தீவு கூட்டத்தில் குவியும் டால்பின்களை வேட்டையாடுவது என்பது இறைச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுகிறது. இத்தனை டால்பின்களை அநியாயமாக கொன்று குவித்துள்ளதை பார்த்து, உலக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த கொடூரத்தை பார்த்து கொதித்து போயுள்ளனர்...

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

என்னதான் பாரம்பரிய நிகழ்வு என்றாலும், இப்படியா டால்பின்களை கொல்வது? என்று கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புகள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளன.. அதேவேளையில் தங்களின் உணவு தேவைக்காகவே டால்பின்களை கொல்வதாகவும், தங்கள் உரிமையை பாதுகாக்க போராடுவோம் என்றும் ஃபாரோ தீவு வாசிகள் தெரிவிக்கின்றனர்... டால்பின்களின் ரத்தக்குவியலுடன், கடற்கரையே சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும் போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

English summary
More than 1400 dolphins killed in a single day on the faroe islands
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X