Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாறு காணாத மழை.. அனைத்தையும் வாரி சுருட்டிய வெள்ளம்! தோண்ட தோண்ட பிணங்கள்.. கதிகலங்கிய காங்கோ

Subscribe to Oneindia Tamil

கின்சாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கோ நாட்டில் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கலேஹே, நியாமுகுபி, கிவு உள்ளிட்ட பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. ஒரு வார காலமாக கனமழை பெய்து வந்த நிலையில் கடந்த 4ம் தேதியன்று கலேஹே பகுதியில் இருந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. ஒரு கட்டத்தில் வெள்ளம் அதிகமாக ஆற்றின் இருபுறமும் இருந்த கரைகள் உடைய தொடங்கின.

More than 200 people have died in floods caused by unprecedented rains in Congo

இதனால் வெள்ளம் கலேஹே ஊருக்குள் நுழைந்தது. இது தன் வழியில் இருந்த அனைத்தையும் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. தற்போது வரையில் சுமார் 203 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்டு படையினர் கூறியுள்ளனர். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், "நாங்கள் இந்த வெள்ளத்தை எதிர்பார்க்கவே இல்லை. இரவோடு இரவாக இது எங்கள் வீடுகள் அனைத்தையும் அடித்து சென்றுவிட்டது. எங்கள் நிலம் எது? என்பதை கூட எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மரங்களும் தெருக்களும்தான் எங்கள் நிலத்தின் அடையாளமாக இருந்தன. ஆனால் இந்த வெள்ளம் எல்லாவற்றையும் அடித்து சென்றுவிட்டது. மரம், செடி கொடி, சாலைகள் என எதுவும் இங்கே இல்லை. வெறுமென கற்கள் மட்டும்தான் இருக்கிறது. எனவே யாருடைய நிலத்தையும் எங்களால் அடையாளம் காண முடியவில்லை. நாங்கள் எங்கு பயிர் செய்ய முடியும்? எங்கு தங்க முடியும்? எல்லாமும் போய்விட்டது. சிலரின் உடல்கள் கூட எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் நம்பிக்கையோடு தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஏற்கனவே கிடைத்த பிணங்களை எங்கு அடக்கம் செய்வது என்றே தெரியவில்லை. எரியூட்டுவதற்கு எரிபொருளும் காய்ந்துபோன கட்டைகள் கூட இல்லை. எனவே மலைகளில் உயரமான இடத்தில் வெறும் இலைகள், கற்களை கொண்டு எங்கள் உறவினர்களின் பிணங்களை புதைத்து வருகிறோம்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகையில், "எத்தனை பேர் காணாமல் போயுள்ளார்கள் என்பது குறித்த முழு தகவல் தெரியவில்லை. எனவே நாங்கள் தோண்ட தோண்ட பிணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இந்த நூற்றாண்டில் காங்கோ சந்தித்த மோசமான உயிரிழப்பு இது.

அரசு தரப்பிலிருந்து தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களை விநியோகித்து வருகிறது. ஆனால் இது போதுமான அளிவில் இல்லை. கூடுதல் உணவு பொருட்கள் தேவைப்படுகின்றன. மழை வெள்ளம் முக்கிய சாலைகளை துண்டாக்கியுள்ளதால் நிவாரண பொருட்கள் மக்களிடம் வந்து சேர்வதில் பெரிய தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே முதற்கட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகிறது" என்று கூறியுள்ளார். அதேபோல அந்நாட்டு அதிபர் பெலிக்ஸ் ஷிசெகெடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

கடந்த வாரம் தொடக்கத்தில் ருவாண்டாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 129 பேர் உயிரிழந்திருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு சோகம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளிலிருந்த மீள அண்டை நாடுகள் உதவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+