சிரியாவில் ரஷ்ய விமான தாக்குதலுக்கு பழிவாங்க குழந்தையை கொன்றேன்: ஆயா

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வெளித் தாக்குதல்களில் பலியான முஸ்லீம்களுக்காக பழிவாங்கவே 4 வயது குழந்தையை கொலை செய்ததாக ஆயா தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனிக்கும் ஆயாவாக வேலை செய்து வந்தார் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா(39). அவர் அந்த குழந்தையை கழுத்தை நெறித்துக் கொலை செய்து கத்தியால் அதன் தலையை துண்டித்தார்.

Moscow beheading: Nanny says she 'killed girl to avenge Putin's air strikes in Syria'

துண்டிக்கப்பட்ட தலையுடன் மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று கத்தினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். மேலும் குழந்தையை அல்லாஹ் கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வெளித் தாக்குதல்களில் பலியான முஸ்லீம்களுக்காக பழிவாங்க குழந்தையை கொன்றதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சிரியாவில் பலியான முஸ்லீம்களுக்காக பழி வாங்கிவிட்டேன். புதினால் விமானங்கள் குண்டுகளை வீசின. அதனால் பலர் பலியாகினர். முஸ்லீம்களை எதற்காக கொலை செய்ய வேண்டும். அவர்களும் வாழத் தானே ஆசைப்பட்டார்கள் என்றார்.

சிரியாவில் அட்டகாசம் செய்யும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க உதவி செய்யுமாறு அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் ரஷ்ய அதிபர் புதினிடம் கோரினார். இதையடுத்து ரஷ்ய ராணுவம் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களில் வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+