முதல் முறையாக இஸ்ரேல் வந்தது பெருமை அளிக்கிறது: பிரதமர் மோடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல் அவில்: முதல் முறையாக இஸ்ரேல் வந்த இந்திய பிரதமர் என்ற பெருமை அடைகிறேன் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு தலைநகர் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.

My honour to be the 1st ever Indian PM to undertake this ground breaking visit to Israel, said modi

தொடர்ந்து ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கிய பங்காற்றுகிறது. பயங்கரவாதம் உள்ளிட்ட சவால்களில் இருந்து நாடுகளை பாதுகாக்க வேண்டும். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் பொதுவான சவால்கள் இருக்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் இஸ்ரேல் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியா மிகப் பழமையான நாகரீகத்தை கொண்டது. முதல் முறையாக இஸ்ரேல் நாட்டிற்கு வந்த இந்திய பிரதமர் என்ற பெருமை அடைகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
My honour to be the 1st ever Indian PM to undertake this ground breaking visit to Israel, said pm modi
Please Wait while comments are loading...