உலகை உறைய வைத்த மியான்மர் நிலநடுக்கம்: சிறைகளும் சிதைந்தனவா? ஆங் சாங் சூச்சி உயிருடன் இருக்கிறாரா?
டெல்லி: உலகையே உறையவைத்திருக்கிறது மியான்மர், தாய்லாந்து நிலநடுக்க பேரழிவுகள்.. தற்போதைய நிலையில் மியான்மர் பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனிடையே மியான்மர் நாட்டை நிலைகுலைய வைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ள சிறைகளின் கதி என்ன என்பது உறுதியாக தெரியாத நிலை இருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மியான்மர் தலைநகர் சர்காயிங் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இந்த சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியான்மர் கட்டிடங்கள் சீட்டு கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன; வீடுகள் மண்ணோடு மண்ணாக புதையுண்டு போயின.

மியான்மர் நிலநடுக்கத்தின் கோரத்தாண்டவத்தைத் தொடர்ந்து பல பகுதிகளில் அவசர நிலையை ஆளும் ராணுவ நிர்வாகம் அறிவித்துள்ளது. மியான்மருக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. மியான்மரின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முதல் நாடாக நமது இந்தியா களமிறங்கி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணி குழுவினர் நேற்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.
தற்போதைய நிலையில் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பலி எண்ணிக்கை 2,000-த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை அதிகபட்சமாக 10,000-த்தை எட்டிவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.
இதனிடையே மியானமர் நாட்டு ராணுவத்தால் சிறை வைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சாங் சூச்சி உள்ளிட்டோர் கதி என்ன என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. 2021-ம் ஆண்டு சூச்சியின் ஆட்சியை கவிழ்த்து அவரை கைதது செய்தது மியான்மர் ராணுவம். 2 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட சூச்சி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் மீண்டும் நேப்பிட்டோவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். நிலநடுக்கம் கோரத்தாண்டவமாடிய இடத்தில் இருந்து நேப்பிட்டோ 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் சிதையுண்டு போன நிலையில் நேப்பிட்டோ உள்ளிட்ட சிறைச்சாலைகளின் கதி என்ன என்பதும் கேள்விக்குறியாகி இருக்கிறது. ஆனால் ஆங் சாங் சூச்சி சிறை வைக்கப்பட்ட நேப்பிட்டோ சிறைக்கு எந்த பாதிப்பும் இல்லை; ஆங் சாங் சூச்சி நலமுடன் இருப்பதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications