உலகம் அழிகிறது? கடலிலிருந்து வெளிவந்த 'கருப்பு நிற' பனிப்பாறை! விஞ்ஞானிகள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடாவின் கடற்கரை பகுதியில் கருப்பு நிறத்தில் பனிப்பாறை ஒன்று தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த பனிப்பாறை, வெளியில் வருவது உலக அழிவுக்கான எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.

கனடாவின் லாப்ரடோர் கடற்கரையில் இந்த கருப்பு பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹல்லூர் அன்டோனியூசென் எனும் மீனவர், தனது படகிலிருந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர் இந்த பனிப்பாறையை பார்த்திருக்கிறார். பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், விநோதமாகவும் இருக்கவே உடனே தனது செல்போனில் அதை படம்பிடித்துள்ளார்.

Canada Ice UK

கருப்பு நிற பனிக்கட்டி

இந்த பாறை சுமார் மூன்று மாடி கட்டிடத்தின் சைஸில் இருந்ததாக கூறும் அவர், கருப்பு நிறத்தில் பனிப்பாறையை தன் வாழ்நாளில் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்த புகைப்படம் தற்போது பரவலாக ஷேராகி வருகிறது.

பனிக்கட்டிகளின் தோற்றம்

கனடா என்பது ஆர்டிக் பகுதியை ஒட்டியுள்ள நாடு. ஆர்டிக் பகுதியில் மைனஸில் வெப்பநிலை இருக்கும் என்பதால், பனிக்கட்டிகள் அதிக அளவில் இருக்கும். கடலில் இந்த பனிக்கட்டிகள் மிதந்து வருவது இயல்பான ஒன்றுதான். வழக்கமாக பனிக்கட்டிகள் வெண்மை நிறத்தில்தான் இருக்கும். இதற்கு காரணம், பனிக்கட்டிக்குள் நீர் துகள்கள் இருப்பதால், அது சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. எனவே கட்டிகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன. சில நேரங்களில் கண்ணாடி மாதிரி கூட தெரியும்.

வித்தியாசமான ஆர்டிக் பகுதி

ஆனால், கருப்பு நிறத்தில் பனிக்கட்டியை இதற்கு முன்னர் யாரும் பார்த்தது கிடையாது. அப்படியெனில் இது என்ன? இதற்கான விடையை ஆய்வாளர்கள் கொடுத்திருக்கிறார்கள். இதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனில், பனிப்பாறைகளின் பயணத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும். மலை உச்சியில் பனிப்பாறைகள் வேகமாக உருவாகும். ஆர்டிக் பகுதிகளில் உள்ள மலைகளில் பாறைகள் உருவாகி, அவை கோடைக்காலத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அடர்த்தியை இழந்து, அடிவாரத்தை நோக்கி வந்திருக்கலாம்.

ஆய்வாளர்களின் விளக்கம்

இந்த பயணத்தின்போது, மண்ணையும், செடி, கொடி, மரத்தின் பாகங்கள் என இன்ன பிற ஏராளமான பொருட்களை ஏற்றிக்கொண்டு பனிப்பாறை வந்திருக்கும். கோடைக்காலம் முடிந்து, மீண்டும் பனிக்காலம் தொடங்கும்பொது, இந்த மண்ணை சுற்றி பனி உருவாகியிருக்கலாம். அப்படி உருவான பனிக்கட்டி தற்போது கடலுக்கு வந்த சேர்ந்திருக்கிறது. இதைத்தான் மீனவர் பார்த்திருக்கிறார் என்று ரியல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் லெவ் தாராசோவ் கூறுகிறார்.

உலக அழிவா?

ஆனால் வேறு சில ஆய்வாளர்கள் வித்தியாசமான விளக்கத்தை கொடுத்திருக்கின்றனர். கருப்பான பொருள் வண்டல் மண்ணாக இருக்கலாம். இந்த மண் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பனிப்பாறைக்குள் சரிந்து விழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போது மீனவர் பார்த்த கருப்பு பனிப்பாறை, அதன் மொத்த சைஸில் வெறும் 5% தான். இந்த பாறையை மூடியிருந்த பனி முழுவதுமாக கரைந்துள்ளது என்று கூறியுள்ளனர். எல்லாம் ஓகேதான். ஆனால், வண்டல் மண் எப்படி கடலில் மிதக்கும்? இந்த கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

வேறு சிலரோ, உலகம் முழுவதும் நடக்கும் மாற்றங்களை குறிப்பிட்டு, இந்த கருப்பு பனிப்பாறை அழிவின் அறிகுறி என்று கூறுகின்றனர். அதாவது இஸ்ரேல்-ஈரான் போர் அணு ஆயுத மோதலை தொடங்கும் என்றும், இந்த மோதல் உலகம் முழுவதும் அணு ஆயுத பயன்பாட்டை ஏற்படுத்தும் என்றும், அது உலகத்தை அழிக்கும் என்றும் கூறுகின்றனர். இதனை முன்கூட்டியே தெரியப்படுத்ததான் கருப்பு பனிப்பாறை தோன்றியிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+