ஆழ்ந்த தூக்கம்... குமட்டல்... மங்கிய பார்வை - கஜகஸ்தான் நாட்டு குழந்தைகளிடையே பரவும் மர்ம நோய்
பெர்சோவோகா: கஜகஸ்தான் என்னும் கசாக் நாட்டில் குழந்தைகளிடையே பரவி வருகின்ற மர்மமான நோய் ஒன்றால் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
கசாக் நாட்டில் அமைந்துள்ள பெர்சோவோகா கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகள் சிலர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தலைச்சுற்றல், கைகால்களில் உணர்ச்சியின்மை , மங்கிய பார்வை, வலிப்பு, பிடிப்புகள், குமட்டல் போன்ற குறைபாடுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தூங்கி விழும் குழந்தைகள்:
மேலும் சில குழந்தைகள் 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக தூங்கி விழுகின்றனர். இதனால் அக்குழந்தைகளின் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

நச்சு வாயுதான் காரணமா?:
அக்கிராமத்திற்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் நச்சு வாயு காரணமாகவே குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்கள்:
என்றாலும், குறித்த மின் உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரும் அந்நாட்டு அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.
இதனால் அந்த கிராம மக்கள் அங்கிருந்து 15 மைல்கள் தொலைவில் உள்ள அக்சய் என்னும் கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

பயமுறுத்தும் நோய்கள்:
இருப்பினும் சிறுவர்களிடையே இந்த நோய் பரவல் தொடர்வது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதித்து சிறிய தலையுடன் பிறக்க வைக்கும் "ஷிகா" வைரஸ் பரவல் பீதியைக் கிளப்பி வருகின்ற நிலையில் புதிதாக பரவி வருகின்ற இந்த மர்ம நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications