சவுதி அரேபியாவுக்கு மோடி பயணம்.. 34 வருடங்களுக்கு பிறகு செல்லும் 2வது இந்திய பிரதமர்
துபாய்: பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் சில நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார். துபாய்க்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அங்கு வசிக்கும் இந்தியர்களையும் சந்தித்து கலந்துரையாடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
34 வருடங்களுக்கு முன்பு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியாவுக்கு சென்றார். அதன் பிறகு பாதுகாப்பு காரணங்களை வலியுறுத்தி எந்த பிரதமரும் சவுதி அரேபியாவுக்கு சுற்றுப் பயணம் செல்லவில்லை.

மன்மோகன்சிங் 2010 பிப்ரவரியில் சவுதி அரேபியா சென்றார். 28 வருடங்களுக்கு பிறகு சவுதி சென்ற முதல் பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றார். மோடியின் சவுதி நாடுகள் பயணத்தின் மூலம், 34 வருடங்களில் அங்கு செல்லும் 2வது பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.
அமெரிக்காவும், ஐக்கிய அரபு நாடான ஈரானும் தற்போது அணுஆயுத ஒப்பந்தம் செய்து கொண்டு நட்புறவாக நெருங்கி வருகிறது. மேலும் சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் உலகம் முழுவதும் மட்டுமின்றி இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே தீவிரவாதத்தை ஒடுக்குவது பற்றியும், வர்த்தக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications