மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும்: முன்னாள் அதிபர் நஷீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாலே: மாலத்தீவுக்கு ராணுவத்தை இந்தியா உடனே அனுப்பி வைக்க வேண்டும் என இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் வலியுறுத்தியுள்ளார்.

மாலத்தீவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு முன்னாள் அதிபர் கையூம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் என பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன்னர் மாலத்தீவில் கையூம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடந்தது.

Nasheed urges India to send military to Maldives

அப்போது இந்திய ராணுவம் விரைந்து சென்று ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடித்தது. தற்போது மாலத்தீவு நிலைமைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இதனிடையே இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம் அடைந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா ராணுவத்தை அனுப்பி, கைது செய்யப்பட்ட முன்னாள் அதிகர் கையூம் மற்றும் நீதிபதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மாலத்தீவுக்கான அனைத்து நிதி உதவிகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் எனவும் நஷீத் வலியுறுத்தியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Maldives President Nasheed has urged that India to send envoy, backed by its military.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற