நேட்டோ உதவவில்லை.. நேட்டோ நாடுகள் தான் உதவுகின்றன - ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ கருத்து
பெல்ஜியம்: உக்ரைனுக்கு நேட்டோ உதவவில்லை, நேட்டோவில் உள்ள நாடுகள் தான் உதவுகின்றன என நேட்டோ பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை போர் தாக்குதலைத் தொடங்கியது. உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துங்கள் என ரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் தெரிவித்தார்.
இதையடுத்து, இரண்டு நாடுகளும் தாக்குதல் நடத்தத் தொடங்கின. தரை வழி, வான் வழி, கடல் வழி என அனைத்து வழிகளிலும் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நேட்டோ
சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து வந்ததும், நேட்டோ நாடுகளுடன் இணைய விரும்பியது இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் துவங்கியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவாக செயல்பட்டுவருகின்றன.

பொருளாதார தடை
உக்ரைனின் கிரிமியா பகுதியை ஆக்கிரமித்ததும் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது. தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததும் இங்கிலாந்து பொருளாதார தடைவிதித்துள்ளது. தங்கள் நட்பு நாடுகளையும் பொருளாதார தடை விதிக்க சொல்லப்படும் என இங்கிலாந்து கூறியுள்ளது. உக்ரைனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நேட்டோ நாடுகள் செய்து வருகின்றன.

உக்ரைன்
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில், ''உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டிக்கிறோம். ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை சீர்குலைத்துவிட்டது எனகண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டுக்குள் நேட்டோ படைகளை அனுப்பும் திட்டம் தற்பொழுது இல்லை.

நேட்டோ உதவவில்லை
உக்ரைன் நோட்டோவில் இல்லை என்பதால் உக்ரைனுக்கு நோட்டோ ஆதரவாக இராணுவ உதவிகளை தற்போது வரை செய்யவில்லை . ஆனால் படைகள் நட்பு நாடுகளில் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். நேட்டோ தலைவர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். உக்ரைனுக்கு நேரடியாக நேட்டோ படைகளை அனுப்ப முடியாது. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும்'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications