NATO Warns Russia: 3ம் உலகப்போர் பத்திகிச்சு.. நேரடியாக ரஷ்யாவுக்கு வார்னிங் கொடுத்த நேட்டோ! அடுத்து என்ன நடக்குமோ!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ருமேனியா, எஸ்தோனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு நேட்டோ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எஸ்தோனியா நாட்டின் வான் எல்லைக்குள் மூன்று மிக் 31 ரக ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்திருந்தன. சுமார் 12 நிமிடங்கள் வரை இந்த விமானங்கள் வான் எல்லைக்குள் இருந்ததாக எஸ்தோனிய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அத்துமீறல் என்றும் இந்த சம்பவத்தை கண்டித்து இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நேட்டோ படைகள் களத்தில் இறங்கின. இதன் பின்னர் ரஷ்ய விமானங்கள் வான் எல்லையில் இருந்து வெளியேறின.

NATO Russia

அதேபோல போலாந்திலும் ரஷ்யாவின் போர் விமானங்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து இருந்தது. இத்துடன் இந்த அத்துமீறல்கள் நிற்கவில்லை. மூன்றாவதாக ருமேனியாவின் வான் பரப்பிலும் அத்துமீறல் நடந்தது. ஆனால் இந்த முறை விமானங்களுக்கு பதில் ட்ரோன்கள் இதை செய்திருந்தன. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் போரில் ட்ரோன்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் ருமேனியா நாட்டின் எல்லைக்குள் ட்ரோன்கள் நுழைந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்த பின்னணியில்தான் ரஷ்யாவுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. நேட்டோ என்பது ஐரோப்பிய-அமெரிக்க ஆதரவு நாடுகளின் கூட்டு ராணுவப்படையாகும். இதன் தலைமையாக அமெரிக்கா இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அல்லது நேட்டோ படையில் உள்ள இதர நாடுகள் தாக்கப்பட்டால் அந்த நாட்டிற்கு உதவியாக மற்ற அனைத்து நாட்டின் ராணுவமும் களத்தில் இறங்கும். எனவே இந்த எச்சரிக்கை ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ போராக தொடரும் என்று அஞ்சப்படுகிறது.

ரஷ்யாவின் செயல்கள் மோசமானவை, அவை உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பவை, எனவே அவற்றை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நேட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை இந்த அத்துமீறல்கள் தொடரும் எனில், அதற்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலே சொன்ன 3 ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் பக்கத்து நாடுகள் ஆகும். பக்கத்து நாடுகளாக இருந்தாலும் அவை அமெரிக்க ஆதரவு நாடுகளாக இருக்கின்றன.

ரஷ்யா-உக்ரைன் போரில் எப்படியாவது உள்ளே நுழைந்து, ரஷ்யாவை வீழ்த்திவிட வேண்டும் என்று அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய அத்துமீறல்களை வாய்ப்பாக அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணி

சோவியத் காலத்தில் ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தது. ஆனால் சோவியத் உடைந்த பின்னர் அது தனி நாடாக சுதந்திரம் பெற்றது. இப்போது உக்ரைன் அதிபராக உள்ள ஜெலன்ஸ்கி,அமெரிக்கா ஆதரவாளர் ஆவார். உக்ரைனை நேட்டோவில் இணைக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அப்படி நடந்தால் அமெரிக்க ராணுவம், உக்ரைன் எல்லைக்குள் பாதுகாப்புக்காக வந்து நிற்கும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே நேட்டோவில் இணையும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று ரஷ்ய அதிபர் வலியுறுத்தி இருந்தார். ஆனால் ஜெலன்ஸ்கி அதை ஏற்கவில்லை. எனவே கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. அன்று தொடங்கி இன்று வரை போர் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+