For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு மற்றொரு மகுடம்... 3ஆவது நாடாக கோவாக்சின் தடுப்பூசிக்கு... நேபாளத்தில் அனுமதி

Google Oneindia Tamil News

காத்மாண்டு: சர்வதேச அளவில் மூன்றாவது நாடாக நேபாளத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் வேகப்படுத்தியுள்ளன.

ஓராண்டில் 3 ராசிகளில் பயணிக்கும் குருபகவான்...கொரோனா பரவலுக்கு பஞ்சாங்கம் கூறும் காரணமும் பரிகாரமும்ஓராண்டில் 3 ராசிகளில் பயணிக்கும் குருபகவான்...கொரோனா பரவலுக்கு பஞ்சாங்கம் கூறும் காரணமும் பரிகாரமும்

இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தடுப்பூசி கொள்முதல் மற்றும் இறக்குமதிக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன

கோவாக்சினுக்கு அனுமதி

கோவாக்சினுக்கு அனுமதி

இந்நிலையில், இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியின் அவரசக்கால பயன்பாட்டிற்கு நேபாளம் தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 2.86 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நேபாளத்தில் பொதுமக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த முடியும் என்று அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது வரை 16 லட்சம் பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

நேபாளத்தில் தடுப்பூசிகள்

நேபாளத்தில் தடுப்பூசிகள்

ஏற்கனவே, அன்பளிப்பாக 10 லட்சம் தடுப்பூசிகள் உட்பட 23 லட்சம் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளை இந்தியாவிலிருந்து நேபாளம் பெற்றுள்ளது. அதேபோல சீனாவும் தனது சினோபார்ம் தடுப்பூசியின் எட்டு லட்சம் டோஸ்களை நேபாளத்திற்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும், அந்தத் தடுப்பூசி எப்போது நேபாளத்திற்குக் கிடைக்கும் என்பது தற்போது வரை தெளிவாகத் தெரியவில்லை.

மூன்றாவது நாடு

மூன்றாவது நாடு

சர்வதேச அளவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கும் மூன்றாவது நாடு நேபாளம் ஆகும். ஏற்கனவே இந்தியா மற்றும் ஜிம்பாவே ஆகிய நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 55 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை நேபாள அரசு மேற்கொண்டு வருகிறது. நேபாளத்தில் இதுவரை 2.75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,016 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் தடுப்பூசி

இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் 26 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவாக்சின் தடுப்பூசியின் தடுப்பாற்றல் சுமார் 81% இருப்பது தெரியவந்தது. பிரதமர் நரேந்திர மோடி கோவாக்சின் தடுப்பூசியையே எடுத்துக்கொண்டது. உலகெங்கும் 40க்கும் மேற்பட்ட நாடுகள் கோவாக்சின் தடுப்பூசியைப் பெற ஆர்வம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Covaxin approved in Nepal for Emergency usage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X