பைத்தியக்காரன் என விமர்சித்ததால் பதிலுக்கு குண்டன் என அழைக்க மாட்டேன்- கொழந்தசாமிக்கு டிரம்ப் பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன் : முதியவர் மற்றும் பைத்தியகாரன் என்று தன்னை விமர்சித்த கிம்மை குண்டன் என்றும் குள்ளன் என்றும் நான் ஒருபோதும் அழைக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதங்களை வடகொரியாவில் சோதனை செய்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இது அந்த நாடு மட்டுமல்லாமல் அண்டைய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தல் என்பதால் கிம் ஜங்கின் செயலுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

 Never called North Korea's Kim Jong-un fat, short: Trump in response on being called 'old'

இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும், வடகொரிய அதிபர் கிம் ஜங்கிற்கும் இடையே கடந்த சில மாதங்கள் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சபையில் கூட்டத் தொடரில் டிரம்ப் பேசும்போது ஏவுகணை மனிதன் கிம்ஜங் ஆட்சிக்கு முடிவு கட்ட ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறார் என்று டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று கிம் ஜாங் தனது டுவிட்டரில் கூறினார். மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது, "வடகொரியா அதிபரின் செயல்பாடு மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம்", என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றும் டுவிட்டரில் கிம் ஜங்கை டிரம்ப் மீண்டும் விமர்சித்துள்ளார். அதில் தன்னை முதியவர் என்று கிம் கூறினாலும் நான் அவரை குள்ளன் மற்றும் குண்டன் என்று கூறமாட்டேன். அவருடன் நட்புறவு ஏற்பட முயற்சிப்பது மிகவும் கடினம். ஆனால் இது ஒரு நாள் ஈடேறும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US President Donald Trump on Sunday said that he would never call North Korean leader Kim Jong-Un "short and fat", after months of trading personal insults and threats of war with the North Korean leader.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X