காட்ராக்ட் பிரச்சனை இனி இல்லை- கண் புரையைக் காலி செய்ய வருகிறது சொட்டு மருந்து!
கலிபோர்னியா: காட்ராக்ட் எனப்படும் கண் புரை அறுவைச் சிகிச்சையில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் ஆபரேஷனே செய்யாமல் கண் புரையை அகற்றும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
ஆம், ஒரு புதிய சொட்டு மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை கண்ணில் ஊற்றி புரையை முற்றிலும் கரைந்து போகச் செய்கிறார்கள்.
கண்ணில் புரதம் அதிக அளவில் சேரும்போது ஒன்றாக சேர்ந்து புரையாக மாறி விடுகிறது. இதனால் கண் பார்வை மங்கலாகிறது. இதுதான் கண் புரையாகும். இதை அறுவைச் சிகிச்சை செய்து தற்போது அகற்றுகிறார்கள்.

அறுவை சிகிச்சை தேவை:
ஒரு கண்ணில் புரை வந்தால் மறு கண்ணிலும் கண்டிப்பாக வரும். அதையும் முதல் அறுவைச் சிகிச்சை முடிந்த ஒரு வருடத்திற்குப் பின்னர் அகற்றி விட வேண்டிய நிலை உள்ளது.இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு சொட்டு மருந்து மூலம் சரி செய்யும் தீர்வை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு சொட்டு போதும்:
கண் புரை வந்ததும் கண்டுபிடித்து விட்டால் இந்த சொட்டு மருந்து மூலம் அதைக் கரைத்து விட முடியுமாம். இது மிகவும் செலவு குறைந்த தீர்வும் கூட. ஒரு நாளைக்கு 2 வேளை இந்த சொட்டு மருந்தைப் போட்டு வர வேண்டும். இன்னும் ஐந்து வருடத்தில் இது பரவலாக நடைமுறைக்கு வந்து விடுமாம்.

வெற்றிகர அறுவை சிகிச்சை:
ஆய்வகச் சோதனைகளின்போது இந்த சொட்டு மருந்தானது, கண்புரையை கரைத்துள்ளதாம். மேலும் நோயாளிகள் பாதிப் பேருக்கு இது வெற்றிகரமாக இருந்ததாகவும் ஆய்வாளர்கள் கூருகின்றனர்.

பார்வை இழப்போர் அதிகம்:
தற்போது உலக அளவில் கண் புரையால் பார்வையை இழப்போர் அதிகம் உள்ளனர். எனவே கண் புரை வந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது கட்டாயமாகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த லேனோஸ்டிரோல் என்ற கண் புரை கரைக்கும் சொட்டு மருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதை முதலில் நாய்களிடம் சோதனை செய்து பார்த்தனர். அதேபோல முயல்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் மனிதர்களுக்கும் சோதனை செய்து பார்த்துள்ளனர்.

முழுமையான சோதனைகள்:
இந்த ஆய்வை சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கவக ஆய்வுக் குழு உருவாக்கியுள்ளது. அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் முழுமையான சோதனைகள் முடிந்து விடும் என்று இந்தக் குவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்து 5 அல்லது 7 ஆண்டுகலில் இது உலகம் முழுதும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஆய்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்தின் ராயல் தேசிய பார்வையற்றோர் கழகத்தின் கிளாரா ஈக்ளன் கூறுகையில், "இது மிகவும் அருமையான அறிவியல் கண்டுபிடிப்பாகும். காட்ராக்ட் பிரச்சினைக்கு இது முடிவு கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications